மாதம் ரூ.2.65 லட்சம் சம்பளம்.. ஆனாலும் ஆட்டோ ஓட்டும் மைக்ரோசாப்ட் ஊழியர்.. என்ன காரணம் தெரியுமா?
Microsoft engineer drives auto: சமூக வலைத்தளம் வந்த பிறகு, உலகம் முழுக்க நடக்கும் பல வேடிக்கையான விஷயங்கள் மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் என்று எல்லாமே இப்போது உடனுக்குடன் ஆன்லைனில் பகிரப்படுகிறது. இந்த வரிசையில், தற்போது பெங்களூருவை சேர்ந்த மைக்ரோசாப்ட் ஊழியர் தெருத்தெருவாக ஆட்டோ ஒட்டி சுற்றிவரும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு ஆட்டோ ஓட்ட ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக அந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. காரணத்தை அறிந்துகொண்டால் நீங்களே ஆடிப்போய்விடுவீர்கள்.
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் சாப்ட்வேர் இன்ஜினியரின் சராசரி சம்பளம் 1 வருடம் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.31.9 லட்சம் ஆகும். அதாவது, சராசரியாக ஒரு மாதத்திற்கு 2,65,000 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்தகைய பெருந்தொகைக்கு நெருங்கிய தொகையை சம்பளமாக வாங்கும் நபர் என்று கருதப்படும் ஒரு மைக்ரோசாப்ட் ஊழியர் பெங்களுரில் ஆட்டோ ஓட்டினராக மாறிய கதை இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாரத்தில் 5 நாள் மைக்ரோசாப்ட் ஊழியர்.. 2 நாள் ஆட்டோ டிரைவர்.. வைரல் ஆன மைக்ரோசாப்ட் ஆட்டோ டிரைவர்:
மைக்ரோசாப்ட் லோகோவுடன் கூடிய ஹூட் ஜாக்கெட் அணிந்து ஒரு நபர் பெங்களூரில் ஆட்டோரிக்ஷா ஓட்டும் புகைப்படம் தற்போது எக்ஸ் பக்கம் வழியாக வெளியாகியுள்ளது. வெங்கடேஷ் குப்தா என்ற நபரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து, இந்த பதிவு வெளியாகியுள்ளது. ஆட்டோ ஒட்டிய அந்த நபரை மைக்ரோசாப்ட் ஊழியர் எனக் கூறி, ஆட்டோ ஓட்டுவது போன்ற புகைப்படத்தை அந்த நபர் வெளியிட்டுள்ளார்.
இவர் வாரத்தில் 5 நாட்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என்றும், வார இறுதி நாட்களில் இவர் ஆட்டோ ஓட்டினராக மாறிவிடுகிறார் என்றும் அந்த நபர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் தனிமையை எதிர்த்து போராட ஆட்டோ ஓட்டுகிறார் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு வார இறுதி நாட்களில் பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறையில் இருக்கும். இந்த நாட்களில் சிலர் தனிமையை உணர்வதாக கூறப்படுகிறது. அப்படி தனிமையை எதிர்கொள்ளும் பெங்களூருவை சேர்ந்த ஒரு மைக்ரோசாப்ட் ஊழியர், தனிமையில் இருந்து தப்பிக்க தன்னை ஒரு ஆட்டோ டிரைவராக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இவர் மைக்ரோசாப்ட் ஊழியர் தானா? சந்தேகத்தை எழுப்பிய நெட்டிசன்ஸ்:
ஜூலை 21 அன்று பகிரப்பட்ட இந்தப் பதிவு, சுமார் 3,54,000-க்கும் அதிகமான பார்வைகளையும், ஏராளமான லைக்குகளையும் குவித்தது. இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் நகைச்சுவையான பதில்களின் அலையைத் தூண்டியது. இந்த பதிவின் காமேட்டில் பல கமெண்ட் செய்திருந்தனர். இதில் ஒரு பயனர் ''50% க்கும் அதிகமான மக்கள் வெளியாட்களாக இருக்கும் ஒரு நகரத்தில் (BLR) ஒரே ஒரு மொழியைப் பேசும்போது இப்படி ஒரு நிகழ்வு நடக்கும்." என்று கூறியிருக்கிறார்.
மற்றொருவர், "மைக்ரோசாப்ட் முடக்கத்தின் விளைவு? மைக்ரோசாப்ட் CrowdStrike ஐத் தேடுகிறது" என்று கேலி செய்தார். மற்றொரு நபர், இவர் உண்மையில் மைக்ரோசாப்ட் ஊழியர் தானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவரை தொடர்ந்து பலர் அதே கோணத்தில் கமெண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.
அதில் சிலர், "இந்த பதிவில் உள்ள நபர் மைக்ரோசாப்ட் ஹூடி அணிந்திருந்ததால், அவர் உண்மையான பொறியாளர் என்று ஆகிவிடுமா? அவர் உண்மையில் அங்கு வேலை செய்யாமல், இந்த ஹூடியை நன்கொடைப் பொளாக மட்டும் வாங்கி அணிந்திருக்க கூட வாய்ப்பிருக்கிறது தானே என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையில் இந்த நபர் யார் என்பதும் தெரியவில்லை. இவர் உண்மையில் மைக்ரோசாப்ட் ஊழியர் தானே என்பதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்த செய்தி உலகம் முழுக்க இப்போது வைரல் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications








