மைக்ரோசாஃப்ட்: புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்கவரும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்!

|

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்பொழுது தனது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர் லோகோவை மாற்றம் செய்துள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசரின் லோகோவை மட்டும் மாற்றம் செய்யவில்லை அதன் மொத்த செயல்பாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

புதிய வடிவம் மற்றும் புதிய லோகோ

புதிய வடிவம் மற்றும் புதிய லோகோ

புதிய பிரௌசர் என்றாலே அதற்கு புதிய வடிவம் மற்றும் புதிய லோகோ என்பது கட்டாயம். குரோமியம் அடிப்படையிலான புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வெர்ஷன் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பிரௌசர் தளத்தை மைக்ரோசாப்ட் தற்பொழுது தயார் செய்துவிட்டது, அதை வெளியிடவும் தயாராகி வருகிறது.

கடல் அலை போல 3D லோகோ

கடல் அலை போல 3D லோகோ

மைக்ரோசாஃப்ட் தனது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசரில் இருந்த 'e' லோகோவை தற்பொழுது மாற்றியுள்ளது. தற்பொழுது வெளியிடப்போகும் புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர்க்கு மாற்றப்பட்டுள்ள புதிய லோகோவும் 'e' வடிவத்தில் தான் உள்ளது, ஆனால் முற்றிலும் நவீனத்துவமாக 3D வடிவத்தில் கடல் அலை போல மாற்றப்பட்டுள்ளது.

மலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.!மலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.!

விரைவில் வெளிவரும் புதிய எட்ஜ் பிரௌசர்

விரைவில் வெளிவரும் புதிய எட்ஜ் பிரௌசர்

புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர் இறுதிக்கட்ட பீட்டா சோதனையின் கீழ் உள்ளது. இறுதிக்கட்ட சோதனை முடிவடையும் தருணத்தில் உள்ளதால், விரைவில் இந்த புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர் வெளியிடப்படும் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

கூகுள் கிறோம் உடன் போட்டியிடுமா?

கூகுள் கிறோம் உடன் போட்டியிடுமா?

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிறோம் உருவாக்கப்பட்ட கிரோமியம் தளத்தில் தான் இந்த புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் இந்த புதிய பிரௌசர் கூகுள் கிறோம் உடன் நேரடியாகப் போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது..உலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்! மண்துகளை விட சிறியது..

புதிய விண்டோஸ் 10 இல் செய்யப்பட்ட மாற்றம்

புதிய விண்டோஸ் 10 இல் செய்யப்பட்ட மாற்றம்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பற்றி மக்கள் மனதில் உள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், மீண்டும் பயனர்களை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் மேம்படுத்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரௌசர் பயன்படுத்த வைப்பதற்கும், இந்த புதிய முயற்சியை மைக்ரோசாஃப்ட் செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அண்மையில் விண்டோஸ் 10 இணக்கத்திற்குக் கீழ் உள்ள பல லோகோவை மைக்ரோசாஃப்ட் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microsoft Edge Has A New Logo Which Runs On Google’s Chromium Open-Source Engine : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X