பில் கேட்ஸ் "மனதை நொறுக்கிய" பால் ஆலன் இன் மரணம்.!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார்.

|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார்.

பில் கேட்ஸ்

இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டில், அவர் லிம்போமா நோய்க்காக முதன் முதலில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. லிம்போமா என்பது வெள்ளை இரத்த அணுக்களில் ஏற்படும் ஒருவகை புற்றுநோய்.

லிம்போமாவால் தாக்கப்பட்ட பால் 2009 ஆம் ஆண்டில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் குணமடைந்து கடந்த ஆண்டு வரை இயல்பாக இருந்த பாலிற்கு மீண்டும் லிம்போமா தாக்கியது, மறுபடியும் சிகிச்சையை துடங்கிய பால் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

பில் கேட்ஸ்

இவர் மைக்ரோசாப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ் இன் பாலிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள், இருவரும் இனைந்து தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு துவங்கினர்.

பில் கேட்ஸ், பால் ஆலன் பற்றி கூறுகையில், தனது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த உண்மையான மற்றும் அருமையான நண்பன் ஆலன் என்றும், அவர் இல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் முதல் கணினி உருவாகி இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில், பால் ஆலன் இடம் பெற்றிருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microsoft co founder Paul Allens death leaves Bill Gates heartbroken : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X