சிங்கிள் ஆனார் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்- 27 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: என்ன காரணம் தெரியுமா?

|

மூன்று மாதங்களுக்கு முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவுடம் விவகாரத்து செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு நீதிமன்றத்தை நாடி தங்களது விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். வாஷிங்டன் மாநில விதிகள் படி விவாகாரத்துக்கு விண்ணப்பித்து 90 நாட்களுக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக விவாகாரத்து வழங்கப்படும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டாவுக்கு வாஷிங்டன் கிங் கவுன்டி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி அறிவித்தது. இருவரும் ஒருமித்து பிரிவதாக முடிவெடுத்து சொத்துக்களை பிரித்துக் கொள்ள முடிவெடுத்தப்படி சொத்துக்களை பிரித்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.

150 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து

150 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து

மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து அறிவித்த போது பில்கேட்ஸ் தம்பதியிடம் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவாகரத்து நிபந்தனைகள்படி பிரிக்கப்படும் சொத்துக்கள் ரகசியம் காக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பில்கேட்ஸ் மெலிண்டாவின் 27 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. வாஷிங்டனின் கிங் கவுண்டி நீதிமன்றத்தின் நீதிபதியால் இது இறுதி செய்யப்பட்டது.

27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முடிவு

27 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முடிவு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின்பு விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். உலகத்தில் உள்ள அனைவருக்கும் பில் கேட்ஸ் என்றால் யார் என்று தெரிந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இவர் உலகத்தின் பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் என்று தான் தெரிந்திருக்கும். ஆனால், மக்களுக்கு உதவும் பல விசித்திரமான யோசனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மையாகும்.

பல சமுதாய நற்காரியங்கள்

பல சமுதாய நற்காரியங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் தான் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஒரு புதுமையான தொழில்முனைவோராகவும், ஒரு எழுச்சியூட்டும் நன்கொடையாளராகவும் நாம் அனைவரும் அறிவோம்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

இந்நிலையில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் சரியாக 27 ஆண்டுகளுக்கு பின்பு விவாகரத்து செய்துள்ளனர். இந்த விவகாரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம்,கல்வி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்களது கூட்டுப் பணிகளை தொடரப் போவதாக பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரிவதற்கான காரணம் என்ன

பிரிவதற்கான காரணம் என்ன

மேலும் பில்கேட்ஸ் தம்பதி வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழுந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி,அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டு உள்ளன. குறிப்பாக இதே பணியில் நாங்கள் இருவரும் தொடர இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ். எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதாவது எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft Co-Founder Bill Gates and Melinda Officially Divorced: Finalized By a Court

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X