சீனாவில் லிங்க்ட்இன் தளத்தை மூடும் மைக்ரோசாஃப்ட்: காரணம் என்ன தெரியுமா?

|

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் சீனாவில் லிங்க்ட் இன் தளத்துக்கு பதிலாக பணி விண்ணப்பிப்புக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளத்தை வழங்கும் எனவும் நெட்வொர்க் அம்சங்கள் இல்லாமல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்டுக்கு சொந்தமான லிங்கிட் இன்

மைக்ரோசாப்ட்டுக்கு சொந்தமான லிங்கிட் இன்

மைக்ரோசாப்ட் கடந்த வியாழக்கிழமை சீனாவில் தொழில் சார்ந்த சமூகவலைதளமாக இருக்கும் லிங்கிட் இன்-ஐ மூடுவதாக கூறியது. தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்கியதால் "சவாலான இயற்கை சூழல்" இருப்பதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிட்டுள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் சீனாவில் லிங்க்ட் இன்-க்கு பதிலாக வேலைகளுக்கு விண்ணப்பிப்புக்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளத்தை வழங்கும் எனவும் நெட்வொர்க்கிங் அம்சங்கள் இல்லாமல் இருக்கும் என மூத்த துணைத் தலைவர் மொஹக் ஷ்ராஃப் குறிப்பிட்டார்.

சவாலான இயக்கச் சூழல்

சவாலான இயக்கச் சூழல்

நாங்கள் சீனாவில் கணிசமான சவாலான இயக்கச் சூழல் மற்றும் அதிக இணக்கத் தேவைகளை எதிர்கொள்வதாக மூத்த துணைத் தலைவர் மொஹக் ஷ்ராஃப் தனது வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டார். 2014-ல் சீனாவில் லிங்க்ட் இன் தளம் தொடங்கப்பட்டது. வேலை வாய்ப்புகளை கண்டறிய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை பயன்படுத்த மக்களை அனுமதித்து வந்தது. மைக்ரோசாப்ட் லிங்க்ட்இன் சீன பதிப்பை நிறுத்தம் செய்யும் எனவும் அந்நாட்டின் தொழில் வல்லுனர்களுக்கு தகுந்த ஊழியர்களை தேடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட InJobs பயன்பாட்டை தொடங்கும் எனவும் ஷ்ராஃப் குறிப்பிட்டார்.

லிங்க்ட் தளத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

லிங்க்ட் தளத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

வர்த்தக சமூகவலைதளமான லிங்க்ட்-இன் நிறுவனத்தை 2016 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. மைக்ரோசாப்ட் இந்த தளத்தை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது. அதன்பின் லிங்க்ட் இன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. உலகளவில் இருக்கும் பல்வேறு பிரபல நிறுவனங்களில் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை லிங்க்ட் இன் நிறுவனம் மூலமாக வர்த்தகம் செய்து வருகின்றனர்.

லிங்க்ட் இன் தளத்துக்கு பெருமளவு வரவேற்பு

லிங்க்ட் இன் தளத்துக்கு பெருமளவு வரவேற்பு

லிங்க்ட் இன் தளத்தில் அவரவர்களின் தொழில்களில் முன்னேறுவதற்கான வழிகள் கொட்டி இருக்கிறது என்றே கூறலாம். தொழில்களில் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள், வேறு இடத்தில் மாறுவதற்கான வழிகள் என பலவகைகளில் லிங்க்ட் இன் தளம் பயன்பட்டு வருகிறது. அதோடு லிங்கட் இன் தளத்தின் மூலம் தேவையான கருத்துகளை, பணியாட்களையும் எடுத்துக் கொண்டு தங்களது தளத்தை முன்னேற்றி வருகின்றனர். லிங்க்ட் இன் தளத்துக்கு என பெருமளவு வரவேற்பு இருக்கிறது.

ஜோஹோ நிறுவனத்தின் செக்யூரிட்டி

ஜோஹோ நிறுவனத்தின் செக்யூரிட்டி

அதேபோல் லிங்கிட் தளம் மூலம் வெளியான கதை பலரையும் பூரிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. 10 ஆம் வகுப்பு படித்து ஜோஹோ நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி புரிந்த ஒருவர் அதே நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக உருவெடுத்துள்ள கதை பலரையும் பூரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த கதை லிங்கிட்இன்-ல் பதிவேற்றப்பட்டதையடுத்து லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்று வருகிறது.

பலரையும் பூரிக்க வைத்த கதை

பலரையும் பூரிக்க வைத்த கதை

அது ஜோஹோ நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஜோஹோ நிறுவன ஊழியர்களின் பொதுவான வார்த்தை, திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே இங்கு வாய்ப்பிருக்கும் என்பதாகும். அதை பரைசாற்றும் வகையில் தற்போது ஜோஹோ நிறுவன ஊழியர் ஒருவரின் கதை பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆலிம் என்பவரின் கதை

ஆலிம் என்பவரின் கதை

ஆலிம் என்பவர் தனது கதையை லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் பாதுகாப்பு அதிகாரி(செக்யூரிட்டி) ஆக பணி ஜோஹோவில் கிடைத்தது. செக்யூரிட்டியாக பணிபுரிந்த இடத்தில் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஷிபு அலெக்சிஸ் என்ற ஊழியருடன் நட்பாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும் பள்ளியில் எச்டிஎம்எல் கற்றுக் கொண்டதாகவும் இவர் ஷிபு-விடம் கூறினேன். இதை கேட்ட ஷிபு, மேலும் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார்.

செக்யூரிட்டி டூ ஆபிஸ் எம்ப்ளாயி

செக்யூரிட்டி டூ ஆபிஸ் எம்ப்ளாயி

அப்துல் ஆலிம்., தினமும் 12 மணிநேர செக்யூரிட்டி பணியை முடித்துவிட்டு மூத்த அதிகாரி ஷிபுவிடம் கோடிங் கற்றுக் கொண்டேன். கோடிங் மீது அதிக ஆர்வம் வந்து தொடர்ந்து கற்றுக் கொண்டேன். சரியாக 8 மாதங்களுக்கு பிறகு சொந்தமாக ஒரு செயலி ஒன்றை உருவாக்கி ஷிபுவிடம் காட்டியுள்ளார். அப்துல் அலிம் உருவாக்கிய செயலியை, ஷிபு தனது மேனேஜரிடம் காண்பித்துள்ளார். இதை மிகவும் விரும்பிய ஷிபு மேனேஜர் தன்னை நேர்காணலுக்கு அழைத்ததாக அப்துல் தெரிவித்தார். இதையடுத்து நேர்காணலுக்கு சென்று அதில் பதில் அளித்துள்ளார். ஜோஹோவில் கோடர் ஆக பணியில் அமர்த்தப்பட்டேன் என கூறினார். இது ஜோஹோ கார்ப்பரேஷன்-ல் எனது 8-வது ஆண்டு என கூறினார். இந்த கதையை லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Microsoft closes LinkedIn site in China: Do you know the reason?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X