மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் காலமானார்.!

|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழந்தார். வெளிவந்த தகவலின்படி, ஜெயின் நாதெல்லா வயது 26 ஆகும். இவர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகபாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள்

குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இமெயில் மூலம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மெயிலில்
நாதெல்லா குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடமளிக்குமாறும், பிராத்தனைகளில் அவர்களை நினைவு கூறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத சலுகை.. இப்படி ஒரு விலை குறைவா? உடனே வாங்கிடலாம் போலயே..ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத சலுகை.. இப்படி ஒரு விலை குறைவா? உடனே வாங்கிடலாம் போலயே..

நாதெல்லாவுக்கு சிறு வயதில் இருந்தே

ஜெயின் நாதெல்லாவுக்கு சிறு வயதில் இருந்தே cerebral palsy குறைபாடு இருந்தது எனக் கூறப்படுகிறது. இது மூளையில் ஏற்படும் குறைபாடு அல்லது காயம் காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் cerebral palsy பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படாது அல்லது முறையாக இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நாதெல்லா அவர்கள் கடந்த 2014-ம் ஆண்

சத்யா நாதெல்லா அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை ஏற்றார். குறிப்பாக அந்நிறுவனத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர் மாற்று திறனாளிக்கும் பலன் அளிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் செயலிகளில் மாற்றம் கொண்டு வரமுயன்றார்.

Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..

ர் என்றும், அவர்

அதேபோல் தனது மகன் ஜெயின் உள்ளிட்ட எல்லோரும் மைக்ரோசாப்ட் செயலிகளை எளிமையாக பயன்படுத்த வேண்டும் என்று ஒரு நிகழ்வில் இவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஜெயின் நாதெல்லா சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் சிறந்த இசை ஆர்வம் கொண்டவர். அதேபோல் நல்ல அமைதியான தோற்றமும் சிரிப்பும் கொண்டவர் என்றும், அவர் எங்கள் மருத்துவமனையில்
மிகவும் மகிழ்வுடன் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

IRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைIRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

ங்கள், தொழில்நுட்ப

குறிப்பாக சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் ஓரம் போங்க., இது எங்க நேரம்: ஐந்து ஸ்மார்ட்போன்கள்., பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்த டிசிஎல்!கொஞ்சம் ஓரம் போங்க., இது எங்க நேரம்: ஐந்து ஸ்மார்ட்போன்கள்., பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்த டிசிஎல்!

த 1992-ம் ஆண்டில் அனுபமா எ

கடந்த 1992-ம் ஆண்டில் அனுபமா என்பவரை திருமணம் செய்த சத்ய நாதெல்லாவுக்கு இன்னும் 2 மக்கள்கள் உள்ளனர். குறிப்பாக இவர்களது குடும்பம் வாஷிங்டனில் வசித்து வருகிறது. மேலும் சிறு வயதில் ஜெயின் நாதெல்லாவின் இழப்பு அவர்களது குடும்பத்தையும், ஐடி
துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Microsoft CEO Satya Nadella 's son passes away: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X