21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா?

|

பெங்களூருவில் பேசிய மைக்ரோசாப்ட் சிஇஐ சத்யா நாதெல்லா தமிழகத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா

மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக திகழ்கிறது என்பது ஆச்சரியம் இல்லை. இந்த நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா பிப்ரவரி 24 முதல் 26 வரை இந்தியா வந்துள்ளார்.

மைக்ரோசாப்ட் சிஇஓ முகேஷ் அம்பானி சந்திப்பு

மைக்ரோசாப்ட் சிஇஓ முகேஷ் அம்பானி சந்திப்பு

இதில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய தொழில்நுட்ப நகரங்களுக்கு பயணம் செய்தார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா உடன் ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார்.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் எதிர்காலத்தில் இது முக்கிய பங்கு

இந்தியாவில் எதிர்காலத்தில் இது முக்கிய பங்கு

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் இன்னும் பெரிய அளவில் வளர நிறைய வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். அதோடு இந்தியாவில் இசை, சினிமா, டிவி... இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட, அதை விட ஆன்லைன் கேமிங் பெரிய சந்தை என முகேஷ் அம்பானி சத்யா நாதெல்லாவிடம் தெரிவித்து இருக்கிறார்.

இளைஞருக்கு நன்றி சொன்ன சிஇஓ

இளைஞருக்கு நன்றி சொன்ன சிஇஓ

பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ளது மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டுபிடித்து அதை சுட்டிக்காட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் செல்லதுரை

தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் செல்லதுரை

கடந்த 2018ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் சுரேஷ் செல்லதுரை. 21 வயதான இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மொத்தம் 21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்துள்ளார்.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 13 வயது மாணவி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 13 வயது மாணவி

அதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 13 வயது நம்யா ஜோஷிக்கும் சத்ய நாதெல்லா நன்றி தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோ சாப்டின் மைன்கிராப்ட் வீடியோ கேம் மற்றும் ஸ்கைப் செயலியைப் பயன்படுத்தி சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Microsoft CEO sathya nadella thanked 21 year old tamilnadu young

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X