Just In
- 5 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 5 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 6 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 7 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திட்டமே வேற., மாபெரும் கேமிங் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்-பில்லியன் டாலர் முதலீடு: சத்யா நாதெல்லா பிளான்!
மைக்ரோசாப்டின் மெட்டாவெர்ஸ் திட்டங்களில் கேமிங் பிரிவு ஒரு பெரிய பகுதியாக இருக்கிறது. தற்போது மைக்ரோசாப்ட் ஆக்டிவிசன் பிளிசார்ட் என்ற மிகப்பெரிய கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. பல பில்லியன் டாலர் தொகையில் இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கி இருக்கிறது. மைக்ரோசாப்ட் வாங்கிய மிகப்பெரிய நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த நடவடிக்கையானது, கேமிங் "மெட்டாவெர்ஸ் தளங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க உதவும்" என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இதுகுறித்து கூறுகையில், கேமிங்கை பாதுகாப்பானதாக மாற்றவும் உலகத் தர உள்ளடக்கங்களை வழங்க கேமிங் சமூகம் மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம் எனவும் புதிய கேமிங் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் விதமாக விளையாடுபவர்கள் மற்றும் கேமிங் வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார். சமீபத்திய நாட்களாக கன்சோல்களை விட ப்ளே ஸ்டேஷன் 5 விற்பனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மொபைல் கேமிங் துறையில் ஆதிக்கம்
மைக்ரோசாப்ட் தனது கிளவுட் சேவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ததையடுத்து தற்போது மொபைல் கேமிங் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது. கால் ஆஃப் டூட்டி மற்றும் கேண்டி க்ரஷ் போன்ற தலைப்புகளுக்கு பெயர் பெற்ற வீடியோ கேம் ஸ்டுடியோவான ஆக்டிவேஷன் பிளாஜார்ட்-ஐ வாங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கேமிங்கிற்கு புகழ்பெற்ற ஆக்டிவேஷன் பிளாஜார்ட்டை 68.7 பில்லியன் டாலருக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சமீப காலமாக மைக்ரோசாப்ட் பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் 26 பில்லியன் டாலர்களுக்கு லிங்க்ட் இன் தளத்தை வாங்கியது.

உலகின் மூன்றாவது பெரிய கேமிங் நிறுவனம்
மைக்ரோசாப்ட் இந்த நிறுவனத்தை வாங்கி இருந்தாலும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான பாபி கோடிக் மைக்ரோசாப்ட் சார்பாக அவரது பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தற்போது மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் மூன்றாவது பெரிய கேமிங் நிறுவனமாக அது உருவெடுத்து இருக்கிறது.

கேம்பாஸ் சந்தாதாரர்களுக்கான அணுகல்
இதன்மூலம் எக்ஸ்பாக்ஸ் பயனர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது என்றே கூறலாம். காரணம் எக்ஸ்பாக்ஸ் கேம்பாஸ் பயனர்கள், எக்ஸ்பாக்ஸ் மற்றும் கணினியில் ஆக்டிவேஷனின் கேம்களை இலவசமாக அணுக முடியும். வார் கராஃப்ட், டயப்ளோ, ஓவர் வாட்ச், கால் ஆஃப் ட்யூட்டி மற்றும் கேண்டி க்ரஷ் போன்ற பல உரிமையாளர்களின் கேம்கள் கேம்பாஸ் சந்தாதாரர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இதில் பல கேம்கள் இணைக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெதஸ்தா என்ற நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் 2021-ல் பெதஸ்தா என்ற நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு பெரிய வீடியோ கேம் ஸ்டுடியோவாகும். இந்த நிறுவனம் ஃபால் அவுட், டெத்லூப் மற்றும் டூம் எடர்னல்ஸ் போன்ற தலைப்புகளுக்கு பெயர் பெற்றதாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம் பெதஸ்தாவை 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் தற்போது ஆக்டிவேஷன் பிளாஜார்ட்டை நிறுவனம் 68.7 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இதில் 10 சதவீதத் தொகையிலேயே பெதஸ்தாவை நிறுவனம் வாங்கியது.

வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் பிரதானமாக கேமிங்
இதை முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்து பல்வேறு நாடுகளில் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெற வேண்டியது அவசியம், இதன் காரணமாக இருவருக்கும் இடையிலான ஒப்பந்தம் 2023 நிதியாண்டில் முழுமையாக முடிவடையும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது. வீடியோ கேமிங் என்பது வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும், இது பில்லியன் டாலர் தொழிலாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இதுபோன்ற கையகப்படுத்தல் மூலம் நிறுவனம் தங்கள் கன்சோல்களில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பிரத்யேக கேம்களை உருவாக்க உதவும். வரும் காலங்களில் எக்ஸ்பாக்ஸ்-ல் நிறைய பிரத்யேக கேம்கள் வருவது இதுபோன்ற ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999