Home
News

மனித இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் குப்பைகளா? ஆராய்ச்சியாளர்கள் கவலை.. ஏன் தெரியுமா?

மாசுபாட்டின் முக்கிய ஆதாரமான மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் பிளாஸ்டிக்கின் சிறிய துகள்கள் முதல் முறையாக மனித இரத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், ஆராய்ச்சியாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட மக்காத குப்பை தான் பிளாஸ்டிக். இது பூமியை அசுத்தம் செய்து, மாபெரும் அபாயகரமான மாசு பொருளாக மாறியுள்ளது. இது இப்போது, பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக பூமியை அழிக்கும் பாலிஸ்டிக் குப்பைகள்

கொஞ்சம் கொஞ்சமாக பூமியை அழிக்கும் பாலிஸ்டிக் குப்பைகள்

முதலில் பூமியின் தரை வளத்தை அசுத்தம் செய்ய துவங்கிய பிளாஸ்டிக் குப்பைகள், கொஞ்சம் கொஞ்சமாக கடலில் கலந்து கடல் வளத்தையும் நாசம் செய்தது. கடல் உயிரினங்களின் வாழ்விற்கும் ஆபத்தாய் மாறியது. பின்னர் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் எல்லா இடங்களிலும் கலந்தது. அதற்கு பின், இது மனிதர்கள் உண்ணும் உணவிலும் கூட கலக்கப்பட்டது என்பது வேதனை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பூமியை அசுத்தம் செய்து, இயற்கைக்கு ஆபத்தாக பிளாஸ்டிக் கழிவுகள் உருவெடுத்தது.

பாலிஸ்டிக்கை விட மைக்ரோ பிளாஸ்ட்டிக் மோசமானதா?

பாலிஸ்டிக்கை விட மைக்ரோ பிளாஸ்ட்டிக் மோசமானதா?

பிறகு இந்த பிளாஸ்டிக் குப்பைகள், அதன் பரிணாமத்தைக் காலப்போக்கில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் வடிவில் மாற்றியது. இப்போது இந்த மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள், நாம் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு தீங்கைப் பூமியில் உருவாக்கியுள்ளது. பூமியில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பூமியில் வாழும் மனிதர்கள் மட்டும் அப்பாற்பட்டவர்களா என்ன? மனிதன் உருவாக்கிய கொடூரமான மாசு, இப்போது அவனையும் தாக்கத் துவங்கியுள்ளது. ஆம், மனிதனின் இரத்தத்திலும் இப்போது இந்த மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துவிட்டது.

மனிதனின் இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் குப்பைகள் கண்டுபிடிப்பா?

மனிதனின் இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் குப்பைகள் கண்டுபிடிப்பா?

நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 80 சதவீத இரத்த மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் இரத்தம் வழியாக உடலைச் சுற்றிப் பயணிக்கலாம் மற்றும் உறுப்புகளில் தங்கலாம் என்பதைக் காட்டுவதால் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த துகள்கள் மனித ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

மைக்ரோ பிளாஸ்ட்டிக் என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது?

மைக்ரோ பிளாஸ்ட்டிக் என்றால் என்ன? அது ஏன் ஆபத்தானது?

உலகம் முழுவதும் ஏற்கனவே அதிகரித்து வரும் மாசு அளவுகள் காரணமாக விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது 0.2 இன்ச் (5 மிமீ) விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துண்டுகளாகும். நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் 22 அநாமதேய நன்கொடையாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை ஆய்வு செய்தனர். பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 17 பேரின் இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது அவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

மனித இரத்தத்தில் கண்டறியப்பட்ட மைக்ரோ பிளாஸ்ட்டிக் கழிவுகளின் பட்டியல்

மனித இரத்தத்தில் கண்டறியப்பட்ட மைக்ரோ பிளாஸ்ட்டிக் கழிவுகளின் பட்டியல்

சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, இந்த மாதிரிகளில் பாதியில் PET (பாலிஎதிலீன் டெரெப்தாலேட்) என்று அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது, இது பானங்கள் தயாரிக்கும் பாட்டில்களில் காணப்படுகிறது. உணவு பேக்கேஜிங்கில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாலிஸ்டிரீன் 36 சதவீத மாதிரிகளில் காணப்பட்டுள்ளது. பேக்கேஜிங் படங்கள் மற்றும் பைகளில் பயன்படுத்தப்படும் பாலிஎதிலீன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அளவில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் குப்பைகள் மனித இரத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளது?

என்ன அளவில் மைக்ரோ பிளாஸ்ட்டிக் குப்பைகள் மனித இரத்தத்தில் கண்டறியப்பட்டுள்ளது?

அதேபோல், 23 சதவீத இரத்த மாதிரிகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். இரத்த மாதிரிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மைக்ரோ பிளாஸ்டிக் அளவுகள் குறைவாக உள்ளன. ஒவ்வொரு மில்லி லிட்டர் இரத்தத்திலும் 1.6 மைக்ரோகிராம்கள் (1.6 மில்லியனில் ஒரு கிராம்) மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் இது மனிதர்களுக்கான அபாய அலாரத்தை எழுப்ப போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மைக்ரோ பிளாஸ்ட்டிக்கை நினைத்து ஆராய்ச்சியாளர்கள் கவலை

மைக்ரோ பிளாஸ்ட்டிக்கை நினைத்து ஆராய்ச்சியாளர்கள் கவலை

"நிச்சயமாக இது பற்றிக் கவலைப்படுவது நியாயமானது. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனித இரத்தத்தில் கலந்துவிட்டது மற்றும் அவை உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன" என்று நெதர்லாந்தில் உள்ள Vrije Universiteit Amsterdam இன் சூழலியல் நிபுணரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பேராசிரியர் டிக் வேதாக் தி கார்டியனிடம் கூறியுள்ளார். ஆய்வு ஒரு "திருப்புமுனை முடிவை" உருவாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனால், மாதிரி அளவு மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட்ட பாலிமர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

காற்றின் மூலம் உணவுகளுக்குப் பரவுகிறதா மைக்ரோ பிளாஸ்ட்டிக்கள்?

காற்றின் மூலம் உணவுகளுக்குப் பரவுகிறதா மைக்ரோ பிளாஸ்ட்டிக்கள்?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் இருந்தும் உணவு மற்றும் பானங்கள் மூலமாகவும் மனித உடலுக்குள் நுழையும் என்று தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகைய துகள்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராசிரியர் வேதாக்கிடம் இந்த வெளியீடு கூறுகிறது. இதிலிருந்து மனிதர்கள் தப்பிக்க "வீட்டின் நல்ல காற்றோட்டம் முக்கியமானது" என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், மைக்ரோபிளாஸ்டிக் செறிவுகள் வெளிப்புறத்தை விட வீட்டின் உட்புறத்தில் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

எப்படி இதிலிருந்து தப்பிப்பது?

காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் துகள்கள் நமது சாப்பாட்டில் படிவதைக் குறைக்க நாம், நமது உணவு மற்றும் பானங்களை மூடி வைத்துப் பயன்படுத்த வேண்டும்" என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். முந்தைய ஆராய்ச்சியில் பிறக்காத குழந்தைகளின் மூளை, குடல் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் உண்மை. ஆனால், மனித இரத்த மாதிரியில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மனிதனின் அலட்சியம் விபரீதத்தில் முடிந்ததா?

மனிதனின் அலட்சியம் விபரீதத்தில் முடிந்ததா?

பிளாஸ்டிக் கிரகத்தின் முன்னணி மாசுபாடுகளில் ஒன்றாகும். பூமியில் உள்ள மலைகளில் இருந்து பெருங்கடல்கள் வரை அனைத்து இடங்களிலும் மனிதனால் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில், கோவாவில் உள்ள சால் கழிமுகத்தில் இருந்து மீன் மற்றும் பிற கடல் உணவு மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆய்வில், நீர், வண்டல் மற்றும் உள்ளூர் விலங்குகள் மற்றும் தாவரங்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microplastics Found In Human Blood For First Time Ever : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X