Home
News

எச்சிஎல் டேப்லட்டிற்கு போட்டியாக புதிய ஃபன்புக் டேப்லட்!

By Super
எச்சிஎல் டேப்லட்டிற்கு போட்டியாக புதிய ஃபன்புக் டேப்லட்!

குறைந்த விலையில் இப்பொழுதெல்லாம் அதிக டேப்லட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக ஃபன்புக் என்ற புதிய டேப்லட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்பது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷமான ஒரு விஷயம். 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயங்கும்.

ஃபன்புக் டேப்லட்டில் டாடா ஃபேட்டோன் இவிடிஓ டேட்டாகார்டு வசதியையும் பெற முடியும். 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் இதில் பயன்படு்த்தலாம். எச்சிஎல் நிறுவனம் சமீபத்தில் மீ யூ-1 என்ற புதிய 7 இஞ்ச் டேப்லட்டை அறிமுகம் செய்தது. இந்த எச்சிஎல் டேப்லட்டிற்கு போட்டியாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஃபன்புக் டேப்லட் இருக்கும். இந்த இரண்டு டேப்லட்களுமே 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட் தான்.

எச்சிஎல் நிறுவனம் வெளியிட இருக்கும் மீ யூ-1 டேப் டேப்லட் கூட ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்குவது தான்.

ஆனால் எச்டிசிஎல் மீ யூ-1 டேப்லட்டை ரூ.7,999 என்ற குறைந்த விலையில் பெறலாம். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த ஃபன்புக் டேப்லட்டை ரூ.6,499 விலையில் பெறலாம்.

எச்சிஎல் நிறுவனத்தின் டேப்லட்டை விட, மைக்ரோமேக்ஸ் டேப்லட்டின் விலை குறைந்ததாக இருக்கும். இதனால் மைக்ரோமேக்ஸின் இந்த புதிய டேப்லட், எச்சிஎல் டேப்லட்டிற்கு சிறந்த போட்டியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X