ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியானது

Written By:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யுனைட் 3 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தளத்தில் இந்த ஸமார்ட்போனை வாங்குபவர்களுக்கு வோடாஃபோன் 500 எம்பி (2ஜி/3ஜி) டேட்டா இலவசமாக வழங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த மாடலிலும் 10 மொழி வரை சப்போர்ட் செய்கின்றது. மேலும் மொழி மாற்றும் வசதியையும் சிறிய ஸ்வைப் மூலம் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியானது

மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 4.7 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

 

English summary
Micromax has officially launched the Unite 3 smartphone in India at Rs. 6,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot