ரகசியமாய் கசிந்த புதிய மைக்ரோமேக்ஸ் யு சிறப்பம்சங்கள்..!
நாளை நடைபெறும் விழாவில் புதிய கருவியை வெளியிட மைக்ரோமேக்ஸ் யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் வெளியாக இருந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ரகசியமாய் கசிந்ததோடு இணையத்தில் வேகமாக பரவியும் வருகின்றது.
கம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்..!!

யு5050 மற்றும் யு4711 என இரு கருவிகளும் ஜீக்பென்ச் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி யு5050 கருவியானது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் சைனோஜன் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளமும் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆப்பிள்' திருவிழா : நம்பலாமா..??

சவுபா எனும் இணையதளத்தில் யு5050 கருவியில் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் என்றும் இந்தியாவில் இந்த கருவியின் விலை ரூ.20,295 அவ்வது ரூ.20,752 ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேய்களுக்கான 'பிரேத்யேக' வலைதளம்..!!
மைக்ரோமேக்ஸ் யு4711 குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் சைனோஜன் சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
