மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!
இந்த ஆண்ட்ராய்டு கோ எடிஷன் முதல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 31 டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.1970-வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் மைக்ரோமேக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட்போன் மாடலை மலிவ விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் புதிதாக வரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இந்த மாதம் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கு என ஆண்ட்ராய்டு கோ எனும் பதிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட்து, அதன்படி இந்த ஆண்டின் துவகத்தில் ஆண்ட்ராய்டு கோ பதிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு கோ எடிஷன்:
இந்த ஆண்ட்ராய்டு கோ எடிஷன் முதல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 31 டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.1970-வரை
நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
லாவா, இன்டெக்ஸ், கார்பன் போன்ற நிறுவனங்களுக்கு இந்த கூடிய விரைவில் இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கிடைக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.'

கூகுள் :
1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சீராக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி:
கூகுள் அசிஸ்டண்ட் கோ, ஜிமெயில் கோ, கூகுள் மேப்ஸ் கோ, யூடியூப் கோ, ஃபைல்ஸ் கோ போன்ற செயலிகள் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்படுகின்றன.

மீடியாடெக்:
மீடியாடெக் மற்றும் குவால்காம் போன்ற நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ சப்போர்ட் செய்யும் சிபெச்ட்களை உருவாக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் ;
மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு ஓரியோவின் ஸ்மார்ட்போனின் சரியான குறிப்புகள் மற்றும் அம்சங்கள் இல்லை, ஆனால் இந்த மாதம்
இறுதியில் மலிவு விலையில் வெளியடுப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications