ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் மைக்ரோமேக்ஸ்..!!

Written By:

மைக்ரோமேக்ஸ் சார்ந்த யு நிறுவனம் மீண்டும் ஒரு முறை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் விளம்பர புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படமானது ஐபோன்களின் பேட்டரி பேக்கப் நேரத்தை ஒப்பிடுவதாக அமைந்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் மைக்ரோமேக்ஸ்..!!

இந்த புகைப்படத்தில் குறைந்த அளவு பேட்டரி மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வோகோ தலைகீழாக இருந்ததோடு, குறைந்த நேர பேட்டரிக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற வாசகமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஐபோன் பேட்டரிகளை விட புதிய யு போனின் பேட்டரி அதிக நேரம் நீடிக்கும் என்பதை விவரிப்பதோடு அமைந்தது. மற்றபடி யு கருவியின் எந்த தகவலும் இல்லை.

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் மைக்ரோமேக்ஸ்..!!

இதே புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து அதிக விலை குறைந்த பேட்டரி, மாற்றி யோசியுங்கள், யுடோபியா என குறிப்பிட்டு "High on price, low on juice! High time; #ThinkDifferent #RaiseTheBar! #Yutopia" என்ற வாசகத்தையும் பதிவு செய்திருந்தது. மேலும் வாசகர்கள் இந்த கருவியை இணையம் மூலம் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் மைக்ரோமேக்ஸ்..!!

தற்சமயம் வரை யு யுடோபியா கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமரி, குவாட் எச்டி டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்கள் வழங்கியிருப்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த கருவி மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது. மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட முதல் யு கருவி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot