Home
News

மைக்ரோமேக்ஸ் யு யுரேகாவினை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும் பாஸ்

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யு யுரேகா ஸ்மார்ட்போனினை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன் அமேசான் தளத்தில் மட்டும் ப்ரெத்யேமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு இல்லாமல் செய்யப்படும் விற்பனை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது பதுன் கிழமை காலை 10 மணி முதல் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யு யுஃபோரியா என்ற புதிய மாடலை வெளியிடும் முன் யு யுரேகா ஸ்டாக்குகளை காலி செய்யும் நோக்கில் இந்த விற்பனையை அறிவித்திருக்கின்றதோடு, புதிய யு யுஃபோரியா ஸ்மார்ட்போன் மே மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் யு யுரேகாவினை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும் பாஸ்

ரூ.8,999க்கு மைக்ரோமேக்ஸ் யு யுரேகா ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி கனெக்டிவிட்டி, சைனோஜென் கொண்ட ஆன்டிராய்டு 4.4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 615 எஸ்ஓசி, 2ஜிபி ரேம் கொண்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருப்பதோடு 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Micromax subsidiary Yu Televentures has announced that the Yu Yureka smartphone will available to buy without any registrations in India on Wednesday and Thursday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X