சீனாவை விட்டு இந்தியா வரும் இந்திய நிறுவனம்.!!

By Meganathan
|

இந்தியவை சேர்ந்த நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அனைத்து மொபைல் போன் கருவிகளையும் இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது மைக்ரோமேக்ஸ் கருவிகளின் விலை இன்னும் குறையும் என்றே கூற வேண்டும்.

பொருத்தம்

பொருத்தம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு கருவிகள் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் பொருத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஹுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

முழுமை

முழுமை

அடுத்த 24 மாதத்தில் மைக்ரோமேக்ஸ் கருவிகளின் 100 சதவீத தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை விட இந்தியாவில் தயாரிப்பு பணிகள் குறைந்த செலவில் முடிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விற்பனை

விற்பனை

2008 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை கருவிகளை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 300 கோடி முதலீடு செய்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்தியாவில் மின்னணு தயாரிப்பு சந்தையை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வரும் நிலையில் ஃபாஸ்கான் நிறுவனமும் 500 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யுடோப்பியா

யுடோப்பியா

உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனான யு யுடோப்பியா எனும் புதிய கருவியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read Here in Tamil why Micromax plans to make all phones in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X