Home
News

ரூ.3,999க்கு புதிய ஸ்மார்ட்போன், நீங்க வாங்குவீங்களா..??

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2 இந்தியாவில் ரூ.3,999க்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.3,999க்கு புதிய ஸ்மார்ட்போன், நீங்க வாங்குவீங்களா..??

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, குவாட்கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டிருப்பதோடு 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 4ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேன்வாஸ் ஸ்பார்க் 2 கருவியில் 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் 1800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 மூலம் இயங்கும் இந்த கருவி ப்ளாஷ் விற்பனை மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்கும் என்றும் விற்பனை பிரத்யேகமாக ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் நடைபெறும் என்றும் தெரகிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax launches Canvas Spark 2 3G smartphone at Rs 3,999. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X