ஆன்டிராய்டு கிட்காட் கொண்ட புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,490
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் புதிய வகை போல்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் போல்ட் AD3520 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் லாஸ் வீகாஸில் நடைபெறும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு ஈபே தளத்தில் இதன் விலை ரூ.3,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய போல்ட் ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 854*850 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்த வரை 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. டூயல் சிம் வசதி கொண்டுள்ள ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளதோடு 1500 எண்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இவைகளோடு வைபை, ப்ளூடூத் 4.0, ஏ-ஜிபிஎஸ் மற்றும் டூயல் ப்ரன்ட் ஸ்பீக்கர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications