மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2., ஜனவரி 25 அறிமுகம்- ரூ.15,000 விலைப்பிரவு., உயர்தர அம்சம்?

|

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஜனவரி 25 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிறுவனம் டுவிட் மூலம் மாடலின் பெயர் வடிவமைப்பு, வண்ண விருப்பிம் மற்றும் வெளியீட்டு தேதியை உறுதி செய்திருக்கிறது.

மைக்ரோமேக்ஸ்  இன் நோட் 2 கிடைக்கும் விலை மற்றும் தன்மை

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 கிடைக்கும் விலை மற்றும் தன்மை

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 பிளிப்கார்ட்டில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை நிறுவனம் இதன் விற்பனை விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆதாரங்களின்படி இந்த சாதனம் ரூ.15000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை இல்லை.

மைக்ரோமேக்ஸ் நோட் 2 விவரக்குறிப்புகள்

மைக்ரோமேக்ஸ் நோட் 2 விவரக்குறிப்புகள்

மைக்ரோமேக்ஸ் நோட் 2 விவரக்குறிப்புகளை விரிவாக பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 இன் சாதனம் குறித்த விவரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை வெளியான தகவல்களை விரிவாக பார்க்கலாம். ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் டுவிட்டரில் "ஒரு வேளை" என பகிர்ந்துள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனில் அமோலெட் டிஸ்ப்ளே எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

திகைப்பூட்டும் கண்ணாடி பூச்சு வடிவமைப்பு

திகைப்பூட்டும் கண்ணாடி பூச்சு வடிவமைப்பு

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 "திகைப்பூட்டும் கண்ணாடி பூச்சு" வடிமைப்போடு கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இது கண்ணாடி பேனலாக இருக்குமா அல்லது கண்ணாடி போன்ற பேனலாக இருக்குமா என்ற தகவல்கள் தெளிவாக தெரியவில்லை. இதன் வண்ண விருப்பங்களை பொறுத்த வரையில், இது ப்ளூ மறறும் பழுப்பு நிற விருப்பங்களுடன் வரும் எனவும் இது பின்புறத்தில் குவாட் கேமரா வடிவமைப்போடு வரும் எனவும் கூறப்படுகிறது.

முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதி

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 முன்னோடியான மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 சாதனத்தின் வடிவமைப்பு குறித்து பார்க்கையில், இது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே வசதியோடு மீடியோ ஹீலியோ ஜி85 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் எனவும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இயக்கப்படுகிறது. அதேபோல் மைக்ரோமேக்ஸ் இன் 2பி விலை அதிகரித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிராண்ட், மைக்ரோமேக்ஸ் சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் விலையை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தவும் வேலை செய்கிறது. விலை உயர்வு பெற்ற சாதனம் மைக்ரோமேக்ஸ் இன் 2B சாதனம் ஆகும். இந்த சாதனம் கடந்த மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தற்போது விலை உயர்வையும் பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2B

மைக்ரோமேக்ஸ் இன் 2B

மைக்ரோமேக்ஸ் இன் 2B இப்போது புதிய அதிகரித்த விலையில் உடன் வருகிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலையை தற்போது ரூ. 500 உயர்த்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் இரண்டு வகைகளை வழங்குகிறது மற்றும் அவை இரண்டும் விலை உயர்வைப் பெற்றுள்ளன. 4 ஜிபி+64 ஜிபி கொண்ட அடிப்படை மாறுபாடு இப்போது ரூ .8,499 விலையிலும், 6 ஜிபி+64 ஜிபி கொண்ட மற்றொரு மாடல் ரூ. 9,499 விலைக்கு கிடைக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

சாதனத்தின் புதிய விலை ஏற்கனவே Flipkart இல் பிரதிபலிக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் வாரிசாக எதிர்பார்க்கப்படுகிறது. இது மாதிரி எண் E7748_64 உடன் கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட்டியலின்படி, சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Micromax IN Note 2 Launching to Set on January 25: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X