ரூ.6,749-க்கு மைக்ரோமேக்ஸ் இன் 2சி வாங்கலாம்: 3ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி- அதிரடி தள்ளுபடி!

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனாகும். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் இந்த சாதனம் சிறந்த தள்ளுபடியோடு கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் இன் 2சி ஸ்மார்ட்போனானது சலுகையோடு ரூ.7499 என்று கிடைத்த நிலையில் தற்போது இந்த சாதனம் கூடுதலாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டு ரூ.6749 என கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் இன் 2சி சாதனத்தை ரூ.6749 என வாங்க விரும்பினால் உங்களிடம் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் இருக்க வேண்டும். பிளிப்கார்ட்டில் பிளாட் 10 சதவீத தள்ளுபடியை பெற வேண்டும் என்றால், மைக்ரோசாப்ட் இன் 2சி சாதனத்தை எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். எஸ்பிஐ கார்ட் இல்லாத பட்சத்தில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி சாதனத்தை வெறும் ரூ.7499 என்ற விலையில் வாங்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனானது ஒரு நுழைவு நிலை சாதனமாகும். இந்த சாதனமானது செலுத்தும் தொகைக்கான சிறந்த அம்சங்களை குறிப்பிடத்தக்க வகையில் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஆண்ட்ராய்டு யூஐ அடிப்படையிலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாகும். மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனானது இரச்சை 4ஜி எல்டிஇ ஆதரவோடுனான நானோ சிம் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி610 எஸ்ஓசி சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் சேமிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி டைப் சி போர் ஆதரவோடு வருகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2சி ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளிவந்த மைக்ரோமேக்ஸ் சாதனத்தில் இருந்த மிகப்பெரிய குறைபாடு இதுவாகும். அதேபோல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனானது 720 பிக்சல் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவு

மைக்ரோமேக்ஸ் In 2c ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.52' இன்ச் டிஸ்ப்ளேவுடன் HD+ ரெசல்யூஷன் கொண்ட 720 × 1600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 20:9 விகித விகிதம் மற்றும் 420 நிட்ஸ் அதிகபட்ச பிரகாசம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த புதிய Micromax In 2c சாதனம் 89% திரை இடத்துடன் வருகிறது. Micromax In 2c ஸ்மார்ட் போன் ஆனது Unisoc T610 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த Micromax In 2c ஸ்மார்ட் போன் 3GB வரை LPDDR4X ரேம் மற்றும் 32GB eMMC 5.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சேமிப்பகத்திற்காக ஒரு பிரத்தியேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் அம்சமும் இந்த சந்தானத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய Micromax In 2c சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது டூயல் நானோ சிம் கொண்ட அம்சத்துடன் வருகிறது.

5000mAh பேட்டரி ஆதரவு

5000mAh பேட்டரி ஆதரவு

Micromax In 2c சாதனம் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 8MP முதன்மை சென்சார் கொண்ட கேமராவுடன் ஒரு VGA சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. Micromax In 2c ஸ்மார்ட் போன் செல்ஃபிக்களுக்கு மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, அதன் முன்புறத்தில் 5MP கொண்ட செல்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல், Micromax In 2c ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும். இது 10W நிலையான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax IN 2C Smartphone Now Available at Rs.6749 in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X