காந்தம் போல கவர்ந்திழுக்கும் புதிய Micromax In 2c அறிமுகம்.. வெறும் ரூ.7,499 விலையில் இப்படி ஒரு போனா?

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்த வரை, இங்கு பட்ஜெட் விலைக்குள் கிடைக்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை தான் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாகத் தான் பட்ஜெட் விலைக்கு மேல் உள்ள பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்திய மக்களின் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தொடர்ந்து பல்வேறு விலை புள்ளியின் கீழ் சில அற்புதமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்போது மக்களின் கவனத்தைக் காந்தம் போலக் கவர்ந்திழுத்துள்ளது.

நம்ப முடியாத விலையில் இப்படி ஒரு அட்டகாச ஸ்மார்ட்போனா?

நம்ப முடியாத விலையில் இப்படி ஒரு அட்டகாச ஸ்மார்ட்போனா?

காரணம், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்று அதன் வரிசையில் உள்ள ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை யாரும் எதிர்பார்த்திடாத மிக மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த விலை புள்ளியில் இந்த சாதனத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று யாருமே கணிக்கவில்லை. நேற்று நாங்கள் பதிவிட்ட பதிவில் கூட இந்த சாதனம் ரூ.10,000 என்ற விலைக்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இந்த புதிய சாதனம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளது.

Micromax In 2c இந்தியாவில் அறிமுகம்

Micromax In 2c இந்தியாவில் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 2சி (Micromax In 2c) என்ற பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 என்று அழைக்கப்படும் மற்றொரு பட்ஜெட் சாதனத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அறிமுகமான In 2b இன் வாரிசாக இந்த Micromax In 2c இருக்கும். இது பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதால், இது நுழைவு நிலை விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய சாதனத்தின் முழு விவரங்களைப் பார்ப்போம்.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

இந்தியாவில் Micromax In 2c ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

இந்தியாவில் Micromax In 2c ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

மைக்ரோமேக்ஸ் In 2c ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6.52' இன்ச் டிஸ்ப்ளேவுடன் HD+ ரெசல்யூஷன் கொண்ட 720 × 1600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 20:9 விகித விகிதம் மற்றும் 420 நிட்ஸ் அதிகபட்ச பிரகாசம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த புதிய Micromax In 2c சாதனம் 89% திரை இடத்துடன் வருகிறது. உண்மையை சொல்ல போனால், இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விலைக்கு இது மோசமானதாக இல்லை என்றே நாம் கூறவேண்டும்.

Micromax In 2c போனின் ஸ்டோரேஜ் மற்றும் OS விபரம்

Micromax In 2c போனின் ஸ்டோரேஜ் மற்றும் OS விபரம்

புதிய Micromax In 2c ஸ்மார்ட் போன் ஆனது Unisoc T610 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த Micromax In 2c ஸ்மார்ட் போன் 3GB வரை LPDDR4X ரேம் மற்றும் 32GB eMMC 5.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சேமிப்பகத்திற்காக ஒரு பிரத்தியேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் அம்சமும் இந்த சந்தானத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய Micromax In 2c சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது டூயல் நானோ சிம் கொண்ட அம்சத்துடன் வருகிறது. பட்ஜெட் விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனத்தின் கேமரா அம்சங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

Micromax In 2c போனின் கேமரா அம்சம்

Micromax In 2c போனின் கேமரா அம்சம்

Micromax In 2c சாதனம் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 8MP முதன்மை சென்சார் கொண்ட கேமராவுடன் ஒரு VGA சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. Micromax In 2c ஸ்மார்ட் போன் செல்ஃபிக்களுக்கு மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, அதன் முன்புறத்தில் 5MP கொண்ட செல்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல், Micromax In 2c ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும். இது 10W நிலையான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Micromax In 2c போனின் ஒரே ஒரு குறை

Micromax In 2c போனின் ஒரே ஒரு குறை

என்ன தான் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இதில் ஒரே ஒரு குறைபாடு மட்டும் மக்கள் மத்தியில் சிறிய குறையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த புதிய Micromax In 2c ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இல்லை. ஆனால் பயனர்கள் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கைப் பெறுவார்கள். இது இன்று பட்ஜெட் அல்லது குறைந்த விலை சாதனங்களில் மிகவும் பொதுவான காட்சியாகும். சரி, இந்த புதிய Micromax In 2c ஸ்மார்ட் போனின் விலை விவரங்களைப் இப்போது பார்க்கலாம்.

செவ்வாய் கிரகத்தில் 2 மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவு: 94 நிமிடங்கள் அதிர்ந்த கிரகம்.. காலனி அமைப்பதில் சிக்கலா?செவ்வாய் கிரகத்தில் 2 மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவு: 94 நிமிடங்கள் அதிர்ந்த கிரகம்.. காலனி அமைப்பதில் சிக்கலா?

இந்தியாவில் Micromax இன் 2c ஸ்மார்ட் போனின் விலை என்ன?

இந்தியாவில் Micromax இன் 2c ஸ்மார்ட் போனின் விலை என்ன?

Micromax In 2c ஸ்மார்ட் போன் ஆனது இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 3ஜிபி + 32ஜிபி மெமரி வேரியண்டில் கிடைக்கும். இதன் விலை ரூ.7,499 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.8,499 என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிமுகச் சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் எந்த தகவலும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் சாதனத்தை வாங்க Flipkart அல்லது Micromax இன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லலாம். இது பிரவுன் மற்றும் சில்வர் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Micromax In 2c Arrives in India At a Starting Price Of Rs 7499 From Flipkart : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X