Micromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.!

|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக மைக்ரோமேக்ஸ் in 2b என்ற நோ-ஹேங் ஸ்மார்ட்போன் மாடலை நாளை அறிமுகம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலுடன் நிறுவனம் கூடுதலாக சில ஆடியோ சாதனங்களையும் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்து, ஒரு புதிய டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Micromax In 2b ஸ்மார்ட்போன் சாதனம் நாளை அறிமுகமா?

Micromax In 2b ஸ்மார்ட்போன் சாதனம் நாளை அறிமுகமா?

இந்த தகவலை மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளார். ராகுல் ஷர்மாவின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது, ''மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நாளை மதியம் 12 மணி அளவில் புதிய #MicromaxIN2b என்ற #NoHangPhone ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. இத்துடன் ட்ரெண்டியான புதிய ஆடியோ சாதனங்களையும் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்

வரவிருக்கும் புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு தளத்தில் இயக்கும் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், இந்த புதிய சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களைப் பொருத்தவரை, மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் செல்பி அனுபவத்திற்கு இது ஒற்றை கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.

ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..

விலை இவ்வளவு கம்மியா இருக்குமா?

மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஸ்மார்ட்போன் சாதனம் கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இல் கிடைக்கும் இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரையில் இது வைஃபை, ப்ளூடூத், கைரேகை சென்சார் உடன் கூடிய பல முக்கிய அம்சங்களை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.8,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக இரண்டு ஆடியோ சாதனங்கள் அறிமுகம்

புதிதாக இரண்டு ஆடியோ சாதனங்கள் அறிமுகம்

இத்துடன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, புதிதாக இரண்டு ஆடியோ சாதனங்களை Micromax நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இரண்டு புதிய ஆடியோ சாதனங்களும் ஏர் ஃபங்கி என்ற பெயரில் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனங்கள் பிளாக், ப்ளூ, ரெட், எல்லோவ் மற்றும் வைட் நிறங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மிகவும் கண்கவர் வண்ணங்களில் இவை வருவதனால் நிச்சயம் இதற்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Realme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன?Realme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன?

பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனை

பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனை

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 30 ஆம் தேதி ஆனா நாளை, இந்த புதிய மைக்ரோமேக்ஸ் in 2b ஸ்மார்ட்போன் உடன் அதன் இரண்டு புதிய ஏர் ஃபங்கி TWS சாதனத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அறிமுக நிகழ்விற்கு பின்னர், மைக்ரோமேக்ஸ் in 2b ஸ்மார்ட்போன் மாற்றம் மைக்ரோமேக்ஸ் ஏர் ஃபங்கி TWS சாதனங்கள் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax In 2b Smartphone With New Air Funky TWS Earbuds Will Be Launching Tomorrow at 12 pm In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X