Home
News

ரூ.2,899க்கு 3ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது..!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் 3ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் என்பதும் பத்தாயிரம் என நினைக்க வேண்டாம், புதிய மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்301 விலை மிகவும் குறைவாக ரூ.2,899க்கு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைவான விலை, அப்படி இந்த போனில் என்ன தான் இருக்க போகிறது என்கின்றீர்களா, தரமான ஸ்மார்ட்போனில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அனைத்து சிறப்பம்சங்களையும் கச்சிதமாக வழங்கி உள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். என்ன தான் வழங்கி இருக்கின்றது என்பதை தொடர்ந்து பாருங்கள்..

ரூ.2,899க்கு 3ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது..!

மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்301 ஸ்மார்ட்போனில் 3.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே 480*854 பிக்சல், 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர், 512 எம்பி ரேம், 4ஜிபி ரோம், மெமரியை கூடுதலாக 16 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 1.3 எம்பி பிக்ஸ்டு ஃபோகஸ் ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. டூயல் சிம் கொண்ட இந்த கருவியில் ஆப்ஸ்களுக்கு 1.17 ஜிபியும், 1.23 ஜிபி மாஸ் ஸ்டோரேஜம் வழங்கப்பட்டுள்ளதோடு 1200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ரூபாய் மூவாயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த 3ஜி ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 15 லட்சம் 3ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax has launched a new budget 3G smartphone called Bolt S301 which is priced at Rs 2899.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X