பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் எவோக் டூயல் நோட்( Evok Dual Note)

By Siva
|

கடந்த வாரம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய வெளியீடான எவோக் டூயல் நோட் மாடலின் டீசர் ஒன்றை வெளியிட்டது. 'பிக்சல் பெர்பெக்ட் லைஃப் என்ற பெயரில் வெளியான இந்த டீசரில் இருந்து இந்த புதிய மாடல் வித்தியாசமான கேமிரா அம்சங்களை கொண்டது என்று புரிய வருகிறது

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் எவோக் டூயல் நோட்

இன்னும் ஒருசில நாட்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலான எவோக் டூயல் நோட் வெளியாகவுள்ள நிலையில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வித்தியாசமான டீசர்களை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து இரண்டு விஷயங்கள் உறுதிபட புரிகிறது. ஒன்று இந்த மாடலின் கேமிரா மற்றும் இன்னொன்று இந்த மாடல் கிடைக்கும் தளம்

12 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த டீசரில் தனித்தனியாக இருக்கும் இரண்டு கேமிராக்கள் ஒன்று சேர்வது போலவும், ஒன்று சேர்ந்தவுடன் மங்கலான தெரிந்த இமேஜ், தெளிவாக தெரிவது போன்றும் உள்ளது.

இ-சிகரெட் நல்லதா, கெட்டதா.? தேசிய அளவிலான முதல் ஆய்வின் முடிவு இதோ.!இ-சிகரெட் நல்லதா, கெட்டதா.? தேசிய அளவிலான முதல் ஆய்வின் முடிவு இதோ.!

இந்த டீசரில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் இந்த எவோக் டூயல் நோட் மாடலின் பின்புறத்தில் இரண்டு கேமிராக்கள் அதாவது டூயல் கேமிரா உள்ளது என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி இந்த டூயல் கேமிராக்கள் அபாரமான ஜூம் வசதியையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமிராவை அடுத்து இந்த டீசரில் இருந்து நாம் புரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம், இந்த எவோக் டூயல் நோட் மாடல் போன், பிளிப்கார்ட்டில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் எந்த தேதியில் இருந்து கிடைக்கும் என்பதை இந்த டீசர் விளக்கவில்லை

இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் வதந்திகளில் இருந்து தெரிய வருவது என்னவெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளிவர வாய்ப்பு உள்ளது என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அந்த தேதியில் 'கான்வாஸ் இன்ஃபினிட்டி சீரிஸ்' ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சீரீஸ் போன்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மாடலை போல பெஸல் லெஸ் மாடல் கொண்டது என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் புதிய புதிய மாடல்களின் வெளியீடுகள் காரணமாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பன்னாட்டி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கு வகையில் போட்டியில் குதித்து வெற்றியும் பெற்று வருகிறது.

இதே ரீதியில் நடுத்தரமான விலையில் தரமுள்ள ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிடும் பட்சத்தில் சியாமி, சாம்சங், லெனாவோ, ஓப்போ போன்ற நிறுவனங்களுக்கு கடும் சவாலாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Micromax Evok Dual Note teaser confirms dual cameras and Flipkart availability.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X