Home
News

டிவி மற்றும் ஹோம் தியேட்டர்களைத் தயாரிக்கும் மைக்ரோமேக்ஸ்

By Karthikeyan
டிவி மற்றும் ஹோம் தியேட்டர்களைத் தயாரிக்கும் மைக்ரோமேக்ஸ்

இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை மலிவு விலையில் மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை மட்டுமே களமிறக்கி வந்தது. தற்போது இந்த நிறுவனம் டிவி பெட்டிகள் தயாரிக்கும் துறையிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

அதாவது தற்போது மைக்ரோமேக்ஸ் 6 புதிய எல்சிடி டிவிகள், 2 ஹோம் தியேட்டர் சிஸ்டம்கள், ஒரு 3டி ப்ளு ரே ப்ளேயர் மற்றும் ஒரு ஸ்மார்ட் ஸ்டிக் ஆன்ட்ராய் டோங்குள் போன்றவற்றை அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் எல்இடி டிவிக்கள் 24 முதல் 55 இன்ச் அளவுகளில் இருக்கும். அதுபோல் இவற்றின் விலையும் ரூ.15,990 முதல் ரூ.1,29,990 வரை இருக்கும்.

மைக்ரோமேகஸ் வழங்கும் ஹோம் தியேட்டர்களுக்கு எச்டி037எப்1 மற்றும் எச்டி089எப்1 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்த ஹோம் தியேட்டர்கள் ரூ.5,990 மற்றும் 6,990 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன.

மைக்ரோமேக்ஸ் வழங்கும் 3டி ப்ளு ரே ப்ளேயர் 2டி மற்றும் 3டி ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். இந்த ப்ளு ரே ப்ளேயர் ரூ.6,490க்கு விற்கப்படுகிறது.

மைக்ரோமேக்ஸின் ஸ்மார்ட் ஸ்டிக் ஆன்ட்ராய்டு டோங்குள் சாதாரண டிவியை ஒரு ஆன்ட்ராய்டு டிவியாக மாற்றும் சக்தி கொண்டது. இந்த டோங்குள் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் எச்டிஎம்ஐ இன்டர்பேஸ், 4ஜிபி நண்ட் ப்ளாஷ் மற்றும் வைபை வசதிகளுடன் வரும் இந்த சாதனம் ரூ.4,990க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X