மைக்ரோமேக்ஸ் புதிய திட்டம்..!

Written By:

சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சொந்தமாக இயங்குதளம் ஒன்றை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய இயங்குதளமானது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், தொலைகாட்சி, டேப்ளெட் மற்றும் அணியக்கூடிய கருவிகளில் பொருந்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..!!

 மைக்ரோமேக்ஸ் புதிய திட்டம் ..!

மற்ற இயங்குதளங்களை போன்று புதிய இயங்குதளமும் கூகுளின் ஓபன் சோர்ஸ் ஆண்ட்ராய்டு சார்ந்து இருக்கும் என்றும் பெங்களூருவில் இருக்கும் மென்பொருள் நிறுவனம் உருவாக்கப்படுவதோடு வடிவமைப்பு பணிகளில் சுமார் 75 பேர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியர்கள் கையில் ஐபோன், இது தான் நடக்கும்..!?

புதிய இயங்குதளம் மூலம் இயங்கும் கருவிகள் இறுதி நிதி ஆண்டிற்குள் வெளியாகலாம் என்றும் இதன் விலை குறைவாகவே இருக்கும் என்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் விகாஸ் ஜெயின் தெரிவித்திருக்கின்றார். ஒவ்வொரு மாதமும் சுமார் 30 லட்சம் கருவிகளை விற்பனை செய்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

Read more about:
English summary
Micromax developing its own OS. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot