சீனாவைச் சீறும் இந்திய நிறுவனம்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 3எஸ் மற்றும் 3எஸ் பிரைம் கருவிகளை இரு தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகக் குறைந்த விலையில் அதிக அம்சங்களை வழங்கியது.
இதன் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கும் நிலையில் சியோமி நிறுவனத்திற்குப் போட்டியாக அதிக அம்சங்களுடன் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது.

வெளியீடு
இந்த ஆண்டு ஜூன் மாதம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் யுனைட் 4 கருவி வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்தக் கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 4 பிளஸ் என்ற கருவியினை அறிமுகம் செய்துள்ளது.

போட்டி
சியோமியின் ரெட்மி 3எஸ் கருவிக்கு நேரடி போட்டியாக இருக்கும் படி இந்தக் கருவி வெளியிடப்பட்டிருப்பது, இதன் அம்சங்கள் மற்றும் விலையை வைத்து அறிந்து கொள்ள முடிகின்றது.

மெமரி
அதன் படி கேன்வாஸ் யுனைட் 4 பிளஸ் கருவியில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

திரை
டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5 இன்ச் எச்டி திரை, குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
கேமராபை பொருத்த வரை 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 12 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
கைரேகை ஸ்கேனர் கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 4 பிளஸ் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 4 பிளஸ் கருவி கோல்டு, கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைப்பதோடு இந்திய சந்தையில் ரூ.7,999 என்ற விலைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications