புதுவரவு : டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர் கொண்ட டேப்ளெட்..!!
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் டூயல் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்ட டேப்ளட் கருவியினை வெளியிட்டுள்ளது. அதன் படி புதிய கேன்வாஸ் டேப் பி680 கருவியின் விலை ரூ.9,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய கருவியானது அநைத்து சில்லறை மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களிடமும் ஆகஸ்டு 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கின்றது.
உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு, தப்பிக்குமா சாம்சங்..??

கேன்வாஸ் டேப் பி680 கருவியில் 8 இன்ச் WXGA (1280 x 880 பிக்சல்) ஐபிஎஸ் பேனல், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு இந்த கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது.
யூட்யூப் மாயாஜாலகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிறந்த ஆடியோவை எதிர்பார்க்கும் பயனாளிகளுக்கு இந்த கருவியானது சிறப்பாக இருக்கும் என்பதோடு 3ஜி, வை-பை மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் மைக்ரோ-யுஎஸ்பி சப்போர்ட் இருப்பதோடு 5 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








