முன்பதிவில்லாமல் விற்பனைக்கு வந்தது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க்
முன்பதிவு மூலம் ப்ளாஷ் விற்பனை செய்து வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி, லெனோவோ மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து ப்ளாஷ் விற்பனை மூலம் கருவிகளை விற்பனை செய்து வரும் நிலையில் மைக்ரோமேக்ஸ்நிறுவனம் கேன்வாஸ் ஸ்பார்க் கருவிகளை இரு நாட்களுக்கு முன்பதிவு இல்லாமல் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றது.
இதை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு ஸ்னாப்டீல் தளத்தில் முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும்.

வைட் கோல்டு மற்றும் க்ரே சில்வர் நிறங்களில் கிடைக்கும் இந்த கருவியின் விலை ரூ.4,999 என்பதோடு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை 5,00,000 கேன்வாஸ் ஸ்பார்க் கருவிகளை இதுவரை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் க்யூ எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 960*540 பிக்சல் ரெசல்யூஷன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் 1.3 ஜிாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6582 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம்கொண்டிருக்கும் இந்த கருவி ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்குவதோடு 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications