மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போனில் ஒரு மாதம் வரை சார்ஜ் நீடிக்கும்
புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஹியு AQ5000 மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போனில் பேட்டரி சேவிங் மோட் வசதியும் உள்ளது, இதன் மூலம் முக்கியமான அழைப்புகள் மற்றும் குருந்தகவல்கலை அனுப்ப முடியும்.
இம்மாதம் வாங்க சிறந்த மைக்ரேமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள்
இந்த விசேஷ மோடை ஆன் செய்தவுடன் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஹியு ப்ரைட்னஸ் மற்றும் வண்னங்களை மாற்றியமைத்து போனில் இயங்கும் தேவையில்லாத செயளிகளை ஆஃப் செய்யும். இதனால் இந்த போனை ஒரு மாதம் வரை சார்ஜ் செய்யாமல் பேட்டரியை முழுமையாக பயன்படுத்த முடியும்.

வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வழங்க மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் 5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம் மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.
8 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத்4.0 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளதோடு சந்தையில் ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications