பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் கருவிகள் வெளியீடு..!!
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரே நாளில் சுமார் மூன்று 4ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் ப்ளேஸ் 4ஜி, கேன்வாஸ் ஃபயர் 4ஜி மற்றும் கேன்வாஸ் ப்ளே 4ஜி என மூன்று கருவிகளும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கேன்வாஸ் ப்ளேஸ் 4ஜி மற்றும் கேன்வாஸ் ஃபயர் 4ஜி கருவிகள் ரூ.6,999க்கும் கேன்வாஸ் ப்ளே 4ஜி ரூ.12,499க்கும் கிடைக்கும் என்பதோடு இவை மூன்றும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ப்ளேஸ் 4ஜி 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 எஸ்ஓசி 1ஜிபி ரேம், 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. இதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை கேன்வாஸ் ப்ளேஸ் 4ஜியில் 3ஜி, ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, 3.5 எம்எம் ஜாக் மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபயர் 4ஜி 1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் எம்டி6735 பிராசஸர் மற்றும் 1850 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மற்ற சிறப்பம்சங்கள் கேன்வாஸ் ப்ளேஸ் 4ஜி கருவியில் இருப்பது போன்றே வழங்கப்பட்டுள்ளது.

கேன்வாஸ் ப்ளே 4ஜி கருவியில் 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுவதோடு 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் 2820 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications
