அதிர வைக்கும் மைக்ரோமேக்ஸ் கருவி வெளியீடு..!!
மைக்ரோமேக்ஸ் நிருவனம் போல்ட் சீரிஸ் வகையில் தனது புதிய ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டது. அதன் படி புதிய மைக்ரோமேக்ஸ் போல்ட் க்யூ339 குறைந்த பட்ஜெட் ரகத்தில் பொருந்தும் படி ரூ.3,499க்கு கிடைக்கும் என்றும் இந்த கருவி பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

இந்தியாவின் 3ஜி வாடிக்கையாளர்களை குறி வைத்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வோடாஃபோன் நிறுவனத்துடன் இணைந்து 500 எம்பி 3ஜி டேட்டாவினை இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..!

சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோமேக்ஸ் போல்ட் க்யூ339 கருவி ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
செல்பீ மோகம் : சிறுவன் பலி..!!

கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருப்பதோடு 3ஜி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், வை-பை 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்களோடு 1650 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications