மைக்ரோமேக்ஸ் A101-னின் விலை ரூ.10,299 !!

Posted By: Staff

மைக்ரோமேக்ஸ் A101-னின் விலை ரூ.10,299 !!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் A101ஆனது ஒரு பேப்லெட்டாகும். இந்த புதிய சாதனம் இப்பொழுது பிலிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதன் தற்போதைய சந்தை விலை ரூ.10,299.

 

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் என்ற இயங்குதளத்தில் செயல்படுகிறது.

 

இதுவும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் A110 போன்ற சிறப்பம்சம்களையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வேறெந்த சிறப்பம்சம்களும் இருக்கப்போவதில்லை எனத்தெரிகிறது.

 

இதன் தொழில்நுட்பக்கூறுகளாவன:

  • 5 அங்குல WVGA திரை,

  • 1 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,

  • 512 எம்பி ரேம்,

  • 2 ஜிபி உள்நினைவகம்,

  • 5 எம்பி கேமரா,

  • டூயல் சிம்,

  • Wi-Fi, 3ஜி மற்றும் ப்ளுடூத்,

  • விலை ரூ.10,299

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot