சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி உட்டப அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவி மாடல்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குற்பிடத்தக்கது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது எம்ஐ வாட்ச் ரிவால்வ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இதன் இதன் 46எம்எம் வெர்ஷனில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இதனுடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்பு 5ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக எம்ஐ வாட்ச் ரிவால்வ் சாதனத்தில் 1.39 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 454×454 பிக்சல் வசதி உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளால் 3 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளதால் இதை சுலபமாக பயன்படுத்த முடியும.

இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இயங்கும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் வசதியை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இதய துடிப்பு சென்சாருடன் பல்வேறு இதர சென்சார்கள் கொண்டிருப்பதால் இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எம்ஐ வாட்ச் ரிவால்வ் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள் இருக்கிறது, இவைகள் மக்களுகு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது இந்த சாதனம்.

சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலில் 420எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இது 14நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது. மேலும் மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் இந்த புதிய சியோமி வாட்ச்.

சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலின் விலை ரூ.10,999-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் தீபாவளி வரை இதுரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications