Home
News

சியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்!

சியோமி பேட்ச்வால் 3.0 குறிப்பிடத்தகுந்த டிவிகளில் பல்வேறு உள்ளடக்க வசதிகளை வழங்குகிறது.

பேட்ச்வால் 3.0 ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது

பேட்ச்வால் 3.0 ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது

சியோமி கடந்த திங்களன்று பேட்ச்வால் 3.0 ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது, இது நிறுவனத்தின் சமீபத்திய சாதனங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கட்டுப்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பேட்ச்வால் 3.o அடுத்தக்கட்டத்தை நோக்கி அதன் பயனர்களை செலுத்தும் விதமாக இருக்கும் என்றே தெரிவிக்கப்படுகிறது.

பேட்ச்வால் 3.0 குறிப்பிடத்தகுந்த டிவிகளில்

பேட்ச்வால் 3.0 குறிப்பிடத்தகுந்த டிவிகளில்

பேட்ச்வால் 3.0 குறிப்பிடத்தகுந்த டிவிகளில் அதாவது எம்ஐ டிவி 4 ஏ, எம்ஐ டிவி 4 சி புரோ, எம்ஐ டிவி 4 ஏ புரோ உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது. கூடுதலாக, பேட்ச்வால் 3.0 திங்களன்று Mi TV 4 Pro, Mi TV 4X மற்றும் Mi TV 4X Pro ஆகிய டிவிகளில் சாப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாருடன் இணைந்த ஒருங்கிணைப்பு

டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாருடன் இணைந்த ஒருங்கிணைப்பு

டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாருடன் இணைந்த ஒருங்கிணைப்பை பேட்ச்வால் 3.o வசதியில் இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது. அதேபோல் பேட்ச்வால் 3.0 பிரத்யேக விளையாட்டு சேனல்களையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பேட்ச்வால் 3.0 இல் உள்ள புதிய சேனல் வசதிகள்

பேட்ச்வால் 3.0 இல் உள்ள புதிய சேனல் வசதிகள்

பேட்ச்வால் 3.0 இல் உள்ள புதிய சேனல் வசதிகள் பயனர்களுக்கு அதிக உள்ளடக்கத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் கூடுதல் உள்ளடக்கங்களுக்கு ஒரு கிளிக் ப்ளே ஆப்ஷன் வசதியும் காண்பிக்கும் என கூறப்படுகிறது.

கபாடி, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ்

கபாடி, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ்

கபாடி, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை உலகெங்கில் இருந்தும் பிரத்யேக சேனலை ஸ்ட்ரீம் செய்யலாம் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

20-க்கும் மேற்பட்ட உள்ளடக்க வசதிகள்

20-க்கும் மேற்பட்ட உள்ளடக்க வசதிகள்

20-க்கும் மேற்பட்ட உள்ளடக்க வசதிகள் இப்போது பேட்ச்வால் 3.0 இயங்குதளத்தில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சர்வதேச ஆவணப்படங்களை இதில் ஸ்ட்ரீம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறிப்பாக 1,500 மணி நேர குழந்தைகளுக்கான கிட்ஸ் சேனல்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

சியோமி இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி

சியோமி இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி

இதுகுறித்து சியோமி இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 4.5 பில்லியன் நிமிட உள்ளடக்க வசதிகள் பேட்ச்வால் இயங்குதளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் எம்ஐ டிவிகளுக்கு பெரும் வரவேற்பை பேட்ச்வால் அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi tv users: xiaomi launches patch wall 3.o in india!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X