தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் சிறந்த அம்சங்களோடு எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட் டிவி!

|

சியோமி நிறுவனம் அனைத்து புதிய எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட்டிவிகளை இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது நான்கு வகைகளில் கிடைக்கிறது. இது டால்பி ஆடியோ, டால்பி விஷன், எச்டிஆர்10+ ஆதரவோடு வருகிறது. சியோமி இத்தாலியில் எம்ஐ டிவி பி1 சீரிஸ் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட்டிவி

Mi TV P1 தொடரில் கிடைக்கும் ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கையில், இது 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் என நான்கு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் டிவிகள் ஆகும். இது மீடியாடெக் சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன. 32 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவியுடன் ஒப்பிடும்போது பிற மூன்று மாடல்கள் டிவிகளும் மாறுபட்ட விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவிகளில் இரண்டு மாடல்களுக்கான விலை அந்நாட்டு ஆன்லைன் வெளியீட்டு தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களை பொறுத்தவரை எம்ஐ டிவி பி1 தொடர் 32 இன்ச் மாடல் இந்திய மதிப்புப்படி ரூ.24,800 ஆகவும் 43 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவியானது இந்திய மதிப்புப்படி ரூ.39,900 ஆக இருக்கிறது.

தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட்டிவி

அதேபோல் உத்தேகவிலை குறித்து பார்க்கையில் இதன் 50 இன்ச் ஸ்மார்ட்டிவி விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்புப்படி ரூ.53,200 ஆக இருக்கும் எனவும் 55 இன்ச் மாடல் விலை இந்திய மதிப்புப்படி ரூ.57,600 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி தனியார் செய்தித்தளத்தில் தெரிவித்த தகவலின்படி, இதன் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்கள் டிவியானது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு காணப்படுகிறது. 32 இன்ச் மாடல் ஆண்ட்ராய்டு 9 பை ஆதரவோடு இயக்கப்படும். 32 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவியானது எச்டி பேனல் 1366x768 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. பிற மூன்று மாடல்களும் 4கே பேனல் தரத்துடன் 3840x2160 பிக்சல் தீர்மானத்தோடு வருகிறது.

தாராளமா வாங்கலாமே- இதோ கம்மி விலையில் எம்ஐ டிவி பி1 தொடர் ஸ்மார்ட்டிவி

பேனல்கள் 60ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. அனைத்து மாடல்களும் 178 டிகிரி கோணத்தை கொண்டுள்ளது. இது 4கே மாடல்கள் என்டிஎஸ்சி வண்ண வரம்புடன் வருகிறது. இது டால்பி விஷன், எச்டிஆர் 10+ மற்றும் எச்எல்ஜி ஆகிய ஆதரவோடு வருகிறது. குவாட் கோர் மீடியாடெக் MT9611 SoC மற்றும் G52 MP2 GPU உடன் ஜோடியாக அனைத்து வகைகளிலும் வருகிறது.

இந்த ஸ்மார்ட்டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்போடு வருகிறது. ஆடியோ ஆதரவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்டிவியில் டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி ஆதரவோடு இரட்டை 10 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. 4கே மாடல்கள் இரட்டை பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5.0, எக்ஸ் எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ அவுட் போர்ட் ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
MI TV P1 Series Launched With Four Sizes, Android, HDR10+ and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X