மிரட்டலான அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Mi TV 5X ஸ்மார்ட் டிவி.! ஸ்மார்ட்டா யோசிக்கும் சியோமி..

|

புதிய Mi TV 5X ஸ்மார்ட் டிவி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள Xiaomi இன் ஸ்மார்ட்டர் லிவிங் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை உள்ளடக்கிய பிரபலமான மி டிவி 4 எக்ஸ் தொடரைப் பின்பற்றும் புதிய டிவி தொடரின் சில முக்கிய அம்சங்களை நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

புதிய Mi TV 5X ஸ்மார்ட் டிவி

புதிய Mi TV 5X ஸ்மார்ட் டிவி

மி டிவி 5 எக்ஸ் மெட்டல் பினிஷ் செய்யப்பட்ட பெசல் உடன் நேர்த்தியான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சியோமி தனது ஸ்மார்ட்டர் லிவிங் 2022 நிகழ்வை ஆகஸ்ட் 26 மதியம் 12 மணிக்கு IST (நண்பகல்) நடைபெறுத்துகிறது. இந்நிகழ்வில் நிறுவனம் சில புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் Mi பேண்ட் 6 மற்றும் Mi நோட்புக் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

ட்வீட் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அறிமுகம்

ட்வீட் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அறிமுகம்

இப்போது, ​​Mi TV 5X ஸ்மார்ட் டிவியும் அந்த பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சியோமியின் புதிய தொடர் ஸ்மார்ட் டிவிகள் சியோமி இந்தியாவின் ட்வீட் மூலம் நிகழ்வில் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வுப் பக்கமும் தற்பொழுது நேரலைக்கு வந்துள்ளது, இதில் புதிய Mi TV 5X ஸ்மார்ட் டிவிக்கான சில முக்கிய அம்சங்களை அந்த பக்கம் தெளிவாகக் காட்டுகிறது.

எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..

சுற்றுச்சூழலுக்கு ஏற்றார் போல செயல்படும் ஸ்மார்ட்டான டிவி

சுற்றுச்சூழலுக்கு ஏற்றார் போல செயல்படும் ஸ்மார்ட்டான டிவி

மி டிவி 5 எக்ஸ் மெட்டல் ஃபினிஷ் கொண்ட குறுகிய பெசல்களுடன் வரும். இது டால்பி-இயங்கும் ஆடியோவைக் கொண்டுள்ளது.இது "கிளா லீடிங் பவர்" மூலம் ஆதரிக்கப்படுகிறது. முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது படத்தின் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த Xiaomi ஸ்மார்ட் டிவி சுற்றுச்சூழலுக்கு ஏற்றார் போல செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

Mi TV 5X புதிய தலைமுறை PatchWall உடன் வெளிவருகிறதா?

Mi TV 5X புதிய தலைமுறை PatchWall உடன் வெளிவருகிறதா?

அதாவது, படத்தின் தரம் அல்லது பிரகாசத்தை மாறும் வகையில் சரிசெய்யும் ஒருவித சுற்றுப்புற ஒளி சென்சாரை இந்த டிவி கொண்டிருக்கிறது. Mi TV 5X புதிய தலைமுறை PatchWall இடைமுகத்தையும் பெறுகிறது. குரல் கட்டுப்பாட்டுடன் இந்த சாதனம் இயங்கக்கூடியது என்பதனால், இதில் கூகிள் அசிஸ்டன்ட் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கூகிள் அசிஸ்டன்ட் சேவைக்காக இது மைக்குகளுடன்வருகிறது.

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..

Mi Band 6, Mi Notebook மற்றும் Mi TV 5X ஒரே நிகழ்வில் அறிமுகம்

Mi Band 6, Mi Notebook மற்றும் Mi TV 5X ஒரே நிகழ்வில் அறிமுகம்

கடைசியாக, நிறுவனத்தின் பிரத்தியேக பக்கத்தின்படி, சிப்செட் எதிர்காலத்தில் வரும் அப்டேட்களுக்கு இணக்கத்துடன் இனைய தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம், மூன்று சாதனங்கள் வரவிருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் Mi Band 6, Mi Notebook மற்றும் Mi TV 5X ஆகியவை அடங்கும்.இன்னும் என்னென்ன சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Mi TV 5X Smart TV Confirmed To Launch On August 26 At Smarter Living Event : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X