Home
News

வியக்கவைக்கும் விலையில் Mi QLED ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

சியோமி நிறுவனம் தனது புதிய Mi QLED 4கே ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது வரும் டிசம்பர் 21-ம் தேதி பிளிப்கார்ட், மி.காம், மி ஹோம் ஸ்டோர் போன்ற தளங்களில் விற்பனைக்குவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அறிமுகம் செய்துள்ள

சியோமி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் Mi QLED 4K டிவி ஆனது Ultra-HD QLED டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம் மறறும் எச்டிஆர்10, எச்டிஆர்10+, HLG, Dolby Vision உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 10

மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான பேட்வால் 3.5 வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 Mi QLED 4K டிவி மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் எம்டி9611 குவாட்-

சியோமி 55-இன்ச் Mi QLED 4K டிவி மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் எம்டி9611 குவாட்-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி டிவியின் ரிமோட்டில் அமேசான்

இந்த புதிய சியோமி டிவியின் ரிமோட்டில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட சில ஹாட்ஸ்கிகள் உள்ளன. பின்பு கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட். குறிப்பாக இதன் ரிமோட் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஆதரவு இடம்பெற்றுள்ள

பின்பு சியோமி 55-இன்ச் Mi QLED 4K டிவியில் 30W ஆறு-ஸ்பீக்கர்கள் ஆதரவு இடம்பெற்றுள்ளது. அதில்4 full range drivers மற்றும் 2 tweeters அமைப்பு உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ வசதியை வழங்கும்.

த் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த

3 எச்டிஎம்ஐ 2.1 போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 60Hz of refresh rate, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.54,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mi QLED TV 4K launched in India: Specs, Features and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X