ரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்!

|

சியோமி எம்ஐ பவர் பேங்க் 3 ஐ 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் திறனோடு இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ பவர் பேங்க் 3 ஐ

எம்ஐ பவர் பேங்க் 3 ஐ

எம்ஐ பவர் பேங்க் 3 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் திறன் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பவர் பேங்க் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்கள் என இரட்டை உள்ளீடுகள் உள்ளது. இந்த எம்ஐ பவர் பேங்க் 3ஐ ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, அதோடு 12 அடுக்கு சுற்று பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் பவர் மேனேஜ்மென்ட் அம்சத்தை கொண்டுள்ளது.

எம்ஐ பவர் பேங்க் 3ஐ விலை விவரங்கள்

எம்ஐ பவர் பேங்க் 3ஐ விலை விவரங்கள்

எம்ஐ பவர் பேங்க் 3 ஐ இந்தியாவில் கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். இதன் விலை மற்றும் கிடைக்கும் விவரம் குறித்து சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் டுவிட் செய்துள்ளார். 10,000 mAh MI பவர் பேங்க் 3I MI.com மற்றும் அமேசானில் ரூ .899 க்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அதோடு இந்த சாதனம் கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வருகிறது.

20,000 mAh பவர் பேங்க்

20,000 mAh பவர் பேங்க்

அதேபோல் 20,000 mAh பவர் பேங்கின் விலை ரூ.1,499 எனவும் தெரிவித்துள்ளார். இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த இரண்டு சாதனங்களும் MI.com, அமேசான் மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

12 பவர் லேயர் சர்க்யூட் பாதுகாப்பு

12 பவர் லேயர் சர்க்யூட் பாதுகாப்பு

எம்ஐ பவர் பேங்க் 3 ஐ., 12 பவர் லேயர் சர்க்யூட் பாதுகாப்புடன் வருகிறது. லி-அயன் பேட்டரிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பாதுகாப்பு மற்றும் திறமையானதாக கருதப்படும் லித்தியம் பாலிமர் பேட்டரிகள் இதில் உள்ளது. அதேபோல் ப்ளூடூத் இயர்போன்ஸ் மற்றும் ஃபிட்னஸ் பேண்ட்களை சார்ஜ் செய்வதற்கு குறைந்த சக்தி பயன்முறை இதில் உள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள பட்டனை இரண்டுமுறை அழுத்துவதன் மூலம் இதற்கேற்ப அம்சம் கிடைக்கும்.

100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!

10000 எம்ஏஹெச் பவர் பேங்க்

10000 எம்ஏஹெச் பவர் பேங்க்

10000 எம்ஏஹெச் பவர் பேங்க் முழுமையாக சார்ஜ் செய்வதற்கு நான்கு மணிநேரமாகும். 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 20,000 எம்ஏஎச் பவர் பேங்க்

ரெட்மி 20,000 எம்ஏஎச் பவர் பேங்க்

அதேபோல் சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி தனது 20,000 எம்ஏஎச் பவர் பேங்கிற்கு விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பவர் பேங்க் இந்தியாவில் ரூ.1,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த பவர் பேங்க் ரூ.1,399 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பவர் பேங்க் எம்ஐ.காம், அமேசான், பிளிப்கார்ட், எம்ஐஹோம் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

18W வரை வேகமாக சார்ஜிங்

18W வரை வேகமாக சார்ஜிங்

இரட்டை யூ.எஸ்.பி டைப்-ஏ உள்ளீடு, மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உடன் வருகிறது. ரெட்மி பவர் பேங்க் 20,000 mAh 18W வரை வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 12-அடுக்கு சுற்று பாதுகாப்பு மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரிகளைக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi Power Bank Launched With 20,000 mAh Capacity and 10,000 mAh Capacity- Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X