Xiaomi No. 1 Mi Fan Sale: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனம் Xiaomi No. 1 Mi Fan Sale எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை டிசம்பர் 19-ம் தேதி
முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட், அமேசான், மி.காம்
மேலும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட், அமேசான், மி.காம் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி மி ஏ3
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 64ஜிபி மற்றும் 128ஜிபி முறையே ரூ.12,499மற்றும் 15,499-விலைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி கே20 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி கே20
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில்
விற்பனை செய்யப்படும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி கே20 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 7ஏ
சியோமி நிறுவனத்தின் 2ஜிபி ரேம் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-விலையில் விற்பனை செய்யப்படும், பின்பு 3ஜிபி ரேம் கொண்ட் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும். அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

போகோ எப்1
சியோமி நிறுவனத்தின் 6ஜிபி ரேம் கொண்ட போகோ எப்1 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படும். பின்பு 8ஜிபி ரேம் கொண்ட போகோ எப்1 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

சியோமி சாதனங்கள்
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பல்ப், ஸ்பீக்கர்,இயர்போன், உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரெட்மி கோ, ரெட்மி வ்யை3 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications