120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன?

|

சியோமியின் எம்ஐ மிக்ஸ் 4 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் ரேம் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை டீனா சான்றிதழ் வெளியிட்டுள்ளது. இது 12 ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமியின் எம்ஐ மிக்ஸ் 4 டிஸ்ப்ளே கேமரா விவரங்களும் கிடைத்துள்ளது.

12 ஜிபி ரேம் அம்சம்

12 ஜிபி ரேம் அம்சம்

இந்த சாதனம் 12 ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. சியோமி மிக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் பிராண்டிற்கு துணிச்சலான முக்கியத்துவம் கொடுக்கிறது. மிக்ஸ் தொடரின் அடுத்த ஜென் சாதனமான எம்ஐ மிக்ஸ் 4 விரைவில் வரக்கூடும் என டீனா தகவல் தெரிவிக்கிறது. மிக்ஸ் தொடரின் அடுத்த சாதனம் ரேம் மற்றும் விருப்பங்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

எம்ஐ மிக்ஸ் 4

எம்ஐ மிக்ஸ் 4

எம்ஐ மிக்ஸ் 4 இந்தாண்டு பிற்பகுதியில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டீனா சான்றிதழ் தகவலில் இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என இரண்டு ரேம் வசதிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இரண்டு ரேம் வசதிகளுடனும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

5ஜி அம்சத்தோடு வரும்

5ஜி அம்சத்தோடு வரும்

இந்த சாதனம் 5ஜி அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது. சியோமியின் சிறந்த சாதனங்களில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது. எம்ஐயூஐ 12 உடனான ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது. எம்ஐ மிக்ஸ் சாதனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அம்சம் டிஸ்ப்ளே மற்றும் கேமரா ஆகும்.

2கே ப்ளஸ் ஸ்க்ரீன் ரெஷன்யூஷன்

2கே ப்ளஸ் ஸ்க்ரீன் ரெஷன்யூஷன்

எம்ஐ மிக்ஸ் சாதனத்தில் 2கே ப்ளஸ் ஸ்க்ரீன் ரெஷன்யூஷன் உடன் வரும் என வதந்திகள் பரவுகிறது. நிறைந்த பட காட்சி அம்சம், இனிமையான அனுபவத்தை வழங்க நிறுவனம் தயாராகி வருகிறது. இது விளையாடுவதற்கும் ஸ்ட்ரீமிங் செய்யவும் சிறந்த அனுபவத்தை வழங்கும். ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 888 உடன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

4500 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

இந்த சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. எம்ஐ மிக்ஸ் சாதனத்தின் வெளியீடு மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்வை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் எம்ஐ பேட் 5 தொடர் டேப்லெட்டையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் எம்ஐ பேட் 5 லைட், எம்ஐ பேட் 5 பிளஸ் மற்றும் எம்ஐ பேட் 5 ப்ரோ ஆகியவை அடங்கும்.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

இந்த டேப்லெட் ஆனது 20 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவைகளுடன் வரும் என கூறப்படுகிறது. முன்புறத்தில் கன்சூட் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இதில் 8720 எம்ஏஎச் பேட்டரி இரட்டை செல் உள்ளமைப்பு ஆகியவையோடு வரும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் எம்ஐ பேட் 5 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வரும் எனவும் இது ஸ்டைலஸ் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Mi Mix 4 Specs Revealed by Teena Certification: Ram, Storage Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X