Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சியோமி நிறுவனம் Independence Saleஎனும் தலைப்பில் அதன் சாதனங்களுக்கு அசத்தலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.

Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தற்போது Live-இல் இருக்கும் Mi Independence Sale ஆனது வரும் ஆகஸ்ட் 9 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை Mi.com வழியாக மட்டுமின்றி பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாகவும் அணுக கிடைக்கும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 8ஜிபி ரேம் கொண்ட சியோமி மி 11 எக்ஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கிறது.

Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் மி 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளிலும் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி டிவிகளுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50 இன்ச் இப்போது ரூ.36,999-க்கு கிடைக்கிறது. பின்பு இதன் 55-இன்ச் மாடல் ரூ.43,999-விலையிலும், 65-இன்ச்
மாடல் ரூ.60,999-விலையிலும் கிடைக்கிறது.

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் TV 4X 50-inch மாடல் ஆனது இப்போது ரூ.36,999 க்கு கிடைக்கிறது. பின்பு இதன் 55-இன்ச் மாடல் ரூ.42,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அதேபோல் சியோமி நிறுவனத்தின் முதல் க்யூஎல்இடி டிவி சாதனத்திற்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனம் ரூ.1000 தள்ளுபடியை பெற்று, இப்போது ரூ.58,999-க்கு வாங்க கிடைக்கிறது.

Mi Independence Sale விற்பனையில் சியோமி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு மி வாட்ச் ரிவால்வ் மாடலுக்கு ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சியோமி நிறுவனம் அண்மையில் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச்( Mi LED Smart TV 4C 32-inch)மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் ஆனது 10W x 2 பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இது அற்புதமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் யுசர் இன்டர்ஃபேஸ்-ல் இயங்குகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Mi Independence Sale: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி மாடலில் Chromecast ஆதரவும் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர 64-பிட் குவாட்-கோர் பிராஸசர் வசதியுடன் இந்த மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ 5, ஆல்ட் பாலாஜி, சோனிலைவ், ஜியோசினிமா, சன்என்எக்ஸ்டி, எபிகான், ஹோய்சாய் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

Best Mobiles in India

English summary
Mi Independence Sale: Best offers for Xiaomi smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X