மீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.!
மீ கால்பந்து திருவிழா 2018ன் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு ஆச்சர்ய பரிசுகளை அறிவித்துள்ளது சியோமி.
கால்பந்து காய்ச்சல் எல்லா இடங்களிலும் பரவி வரும் வேளையில், பல்வேறு பிராண்டுகளும் தங்களின் பயனர்களுக்கு கவர்ச்சியான இலவசங்களை அள்ளிவீசுகின்றன. பிஃபா உலக கோப்பை 2018ஐ முன்னிட்டு ஏற்கனவே பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. தற்போது, சியோமி நிறுவனம் மீ ப்ரவுசர் பயன்படுத்தும் சியோமி பயனர்களுக்கான மீ கால்பந்து திருவிழா 2018 விற்பனையை அறிவித்துள்ளது. இது நிச்சயம் இந்தியாவில் உள்ள கால்பந்து இரசிகர்களுக்கு ஆர்வமளிக்கும்.

மீ கால்பந்து திருவிழா 2018ன் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு ஆச்சர்ய பரிசுகளை அறிவித்துள்ளது சியோமி. ரெட்மீ நோட் 5 ப்ரோ(x1), 3ஜிபி+32ஜிபி வகையிலான ரெட்மீ நோட்5 (x3),மீ பேண்டு 2(x15), 1000mAh மீ பவர்பேங்க் 2i(x10) மற்றும் மீ இயர்போன் சில்வர்(x10) போன்ற பரிசுகளும் அதில் அடக்கம்.
ஜூலை20, 2018 நள்ளிரவு வரை இந்த கால்பந்து திருவிழா நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஜூன்18,25, ஜூலை 2,9,16,20ஆகிய நாட்களில் அறிவிக்கப்படுகிறது. இந்த வெற்றியாளர்கள் 5 ஸ்லாட்டுகளில் நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியில் பங்குபெறுவோர் 3நாட்களில் 2சுற்றுகளை விளையாடி மூன்றாவது ஸ்லாட்-ஐ அன்லாக் செய்யவேண்டும். மீண்டும் 5 நாட்கள் விளையாடி 4வது ஸ்லாட்டை அன்லாக் செய்யலாம். 5வது ஸ்லாட்டை அன்லாக் செய்ய, போட்டியாளர்கள் 7 நாட்கள் போட்டியில் பங்குபெறவேண்டும்.

மீ கால்பந்து திருவிழா 2018 ல் விளையாடுவது எப்படி?
இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தினமும் தரப்படும் தொடர் டாஸ்க்குகளை முடிப்பதன் மூலம் பரிசுகளை வெல்லலாம். நீங்கள் கால்பந்து போட்டியின் முடிவுகளை கணிக்க வேண்டும். சரியான கணிப்புகளுக்கு காயின்கள் தரப்படும். காயின்களை வெற்றிபெறும் பயனர்கள் குலுக்கலில் பங்கேற்று பரிசுகளை வெல்லமுடியும்.
கால்பந்து போட்டிகளின் முடிவுகளை கணிப்பதற்கு,போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்படும் - வெற்றி, தோல்வி, சமநிலை. அதற்கேற்றவாறு W,L அல்லது D என்பதை தேர்வு செய்யவேண்டும். ஒருமுறை தேர்வு செய்துவிட்டால் அதை மாற்றமுடியாது. ஒவ்வொரு கணிப்பிற்கும் பயனர்கள் எந்தவொரு காயின்களையும் செலவளிக்க தேவையில்லை. சரியான கணப்புகளுக்கு பயனர்களின் மீ கணக்கில் அதிக காயின்கள் வரவுவைக்கப்படும்.

காயின் தொகுப்பு என்னும் பொது தொகுப்பில் இருந்து பங்கேற்பாளர்கள் காயின்களை பெறமுடியும். இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த காயின்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே எண்ணாக காண்பிக்கப்படும். தவறாக கணிப்பவர்களுக்கு எந்தவொரு காயினும் கிடைக்காது. சரியாக கணிப்பதன் மூலம் சேர்க்கப்படும் காயின்கள் ஜூலை 20வரை மட்டுமே செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications