சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!
ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் சியோமி ஃபிளாஷ் விற்பனையில் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 32-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5999-விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் ஏப்ரல் 2-ம் தேதி துவங்கிய மி ஃபேன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது, அதன்பின்பு வரும் ஏப்ரல் 5-ம் தேதி மற்றும் 6-ம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிரடி ஃபிளாஷ் விற்பனை ஏப்ரல் காலை 6மணிக்கு துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு மி இயர்போர்களை இலவசமாக வெல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சியோமி மி மிக்ஸ் 2:
சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3,000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-என்ற விலையில் வாங்க முடியும், அதன்பின்பு
மி ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் சாதனத்திற்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.1,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி மி மேக்ஸ் :
சியோமி மி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ,12,999 விலையில் விற்பனை செய்யப்படும், அதன்பின்பு
மி கார் சார்ஜர் சாதனத்திற்கு ரூ.200 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.499 விலையில் விற்பனை செய்யப்படும்.

சியோமி ரெட்மீ 4:
சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ,9999 விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் மி ஹெட்போன்
கம்ஃபர்ட் ரூ.300 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.2,699 விலையில் விற்பனை செய்யப்படும்.

ஏப்ரல் 5:
ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் சியோமி ஃபிளாஷ் விற்பனையில் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 32-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.5999-விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன்,ப்ளூடூத் ஸ்பீக்கர், இயர்போன், மி பேன்ட் ஸ்டிராப் போன்ற பல்வேறு
சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேர் அன்ட் இயர்ன்:
சியோமி அறிவித்துள்ள ஷேர் அன்ட் இயர்ன் சலுகையில் வாடிக்கiயாளர்கள் குறிப்பிட்ட சலுகையை கூப்பன்கள் மூலம் பெற முடியும், மேலும்
இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications