Mi Fan Festival 2019: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடிவிலைகுறைப்பு.!
சியோமி நிறுவனத்தின் மி எல்இடி டிவி 4 ப்ரோ(55-இன்ச்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.45,999-விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் Mi Fan Festival 2019 எனும் தலைப்பில் தனது ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது,இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஏப்ரல்-6-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ரூ.1-க்கு பிளாஷ் சேல் நடைபெறும் என்று சியோமி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு விற்பனை மி.காம், மி ஹோம், மி ஸ்டோர், போன்ற ஆன்லைனில் தளங்களில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ எப்1:
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

மி எல்இடி டிவி 4 ப்ரோ:
சியோமி நிறுவனத்தின் மி எல்இடி டிவி 4 ப்ரோ(55-இன்ச்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.45,999-விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ:
4ஜிபி ரெம் மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் மற்றும 64ஜிபி உள்ளடக் மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ:
4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும்.

பிளாஷ் சேல்:
சியோமி நிறுவனம் அறிவித்துள்ள ரூ.1 பிளாஷ் சேல் பொறுத்தவரை 32-இன்ச் சியோமி டிவி, போகோ ஸ்மார்ட்போன், பாதுகாப்பு கேமரா, ப்ளூடூத் இயர்போன், மி சவுண்ட்பார் போன்ற சாதனங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சியோமி சாதனங்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியும், கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். மேலும் இந்த விற்பனையின் போது நடத்தப்படும் விளையாட்டுகளில் வென்றால் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications