விட்றாதீங்க! ரூ.5,299க்கு ஸ்மார்ட்போன்.. ரூ.10,349க்கு ஸ்மார்ட் டிவி.. அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும் மக்கள்!
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளங்களின் தீபாவளி சிறப்பு விற்பனைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம், சீன நிறுவனமான ஷாவ்மீ (Xiaomi), அதன் எம்ஐ.காம் வலைத்தளத்தில் (Mi.com Website) தீபாவளி வித் எம்ஐ 2023 (Diwali with Mi 2023) என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.
இந்த விற்பனையில் ஷாவ்மீ மற்றும் ரெட்மி பிராண்டுகளின் கீழ் வாங்க கிடைக்கும் பல்வேறு வகையான தயாரிப்புகள் மீது நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

என்னென்ன ஷாவ்மீ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது? ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G) ஸ்மார்ட்போன் ரூ.31,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி ஏ2 (Redmi A2) மாடலானது வெறும் ரூ.5,299 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.9,999 ஆகும்.
இதேபோல ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) மாடலானது ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் ரூ.15,999 க்கு பதிலாக வெறும் ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ஷாவ்மீ 13 ப்ரோ (Xiaomi 13 Pro) ஸ்மார்ட்போன் ரூ.89,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 12 Pro+ 5G) மாடலானது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.33,999 ஆகும்.
இதேபோல ரெட்மி நோட் 5ஜி (Redmi Note 5G) மாடலானது வெறும் ரூ.10,799 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.17,999 ஆகும். கடைசியாக ரெட்மி நோட் 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் ரூ.20,999 க்கு பதிலாக வெறும் ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

என்னென்ன ஷாவ்மீ, ரெட்மி ஸ்மார்ட் டிவிகளின் மீது தள்ளுபடி கிடைக்கிறது? 32-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் (Xiaomi Smart TV A Series) ஸ்மார்ட் டிவியானது ரூ.10,349 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.24999 ஆகும். இதேபோல இன்னொரு 32-இன்ச் ஸ்மார்ட் டிவியான ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ சீரீஸ் மாடலானது ரூ.25999 க்கு பதிலாக ரூ.11,599 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விரும்பினால், ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் மாடலானது வெறும் ரூ19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ.42999 ஆகும். ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸின் 43-இன்ச் 2023 எடிஷன் (Xiaomi Smart TV X 43 2023 Edition) ரூ.42999 க்கு பதிலாக வெறும் ரூ.23,749 க்கு வாங்க கிடைக்கிறது.
மேலும் இந்த எம்ஐ தீபாவளி விற்பனை 2023-இல் (Mi Diwali Sale 2023), ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸின் 43-இன்ச் மாடல் (Xiaomi Smart TV X Pro 43) ரூ.49,999 க்கு பதிலாக ரூ.28,249 க்கு வாங்க கிடைக்கிறது. 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் 4கே ஸ்மார்ட் டிவியானது ரூ.20,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.42,999 ஆகும்.
50-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, 50-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ (Xiaomi Smart TV X Pro 50) மாடலானது ரூ.37,749க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியின் ஒரிஜினல் ப்ரைஸ் ரூ.59,999 ஆகும். கடைசியாக 55-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2023 எடிஷன் (Xiaomi Smart TV X 55 2023 Edition) ரூ.54,999க்கு பதிலாக ரூ.34,749க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications