Home
News

குறை என்கிற பேச்சுக்கே இடமில்ல., அதுவும் குறிப்பா உங்களுக்கு- எம்ஐ அறிமுகம் செய்யும் அட்டகாச சாதனம்!

எம்ஐ 11 அல்ட்ரா 67வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் அம்சம் இந்தியாவில் விரைவில் வரும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதன் விலை மற்றும் காரணம் குறித்து பார்க்கலாம். எம்ஐ அல்ட்ரா சாதனங்கள் தற்போது 55 வாட்ஸ் சார்ஜ் ஆதரவோடு வருகிறது. தற்போது 67 வாட்ஸ் சார்ஜ் ஆதரவோடு விரைவில் தொகுக்கப்பட்ட சார்ஜர் இந்தியாவில் வரும் என சியோமி உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனம் கடந்தமாதம் இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை வெளியிட்டது.

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

சியோமி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை வெளியிட்டது. இந்த சாதனத்தின் முக்கிய அம்சம் 67 வாட்ஸ் கம்பி சார்ஜிங் அம்சத்தோடு வந்தது. ஆனால் இந்த பிராண்டுடன் சியோமி சார்ஜர் சாதனத்தை இதற்கு இணையாக வெளியிடவில்லை என புகார் எழுந்தது. காரணம் இந்த சாதனத்துடன் 55வாட்ஸ் சார்ஜ் மட்டுமே பெட்டியில் இருந்தது. பயனர்களுக்கான சார்ஜர் அம்சம் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் சியோமி பயனர்கள் சிக்கலை தீர்க்க இறுதியாக 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் அடாப்டரை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.

தனித்தனியாக விற்பனை செய்யப்படும்

தனித்தனியாக விற்பனை செய்யப்படும்

67 வாட்ஸ் சார்ஜர் தனித்தனியாக விற்பனை செய்யப்படும் எனவும் இது விரைவில் இந்தியாவுக்கு வருவதாகவும் சியோமி நிறுவனம் மைஸ்மார்ட் பிரைஸ் தளத்துக்கு உறுதிப்படுத்தியது. இருப்பினும் இதன் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் தெரியவில்லை. தற்போதுவரை வாடிக்கையாளர்கள் பெட்டியில் 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் மட்டுமே இருக்கிறது அதுவே பயனர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது சாதனத்தை ஒரு மணிநேரத்துக்குள் சார்ஜ் செய்ய முடிகிறது. இதேநிலையில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யும் போது இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய வெறும் 36 நிமிடமே ஆகும் என்பது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது. மேலும் இதில் 10 வாட்ஸ் சக்தி வாய்ந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு ஆதரவும், பின்புறத்தில் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவாக 1.1 இன்ச் அளவுடன் இருக்கிறது. எம்ஐ 11 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபீயுடன் இயக்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 120 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் திரையின் மேல் இடதுமூலையில் 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,999 ஆக இருக்கிறது. அதேபோல் இது காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
MI 11 Ultra's 67 W Fast Charger May Launching Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X