3 வாரத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் விற்பனையான Mi 10i 5G.. 2021ம் ஆண்டின் சூப்பர் ஸ்பீட் சேல்ஸ் இது தான் போல..

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலாக புதிய Mi 10i 5G சாதனத்தை இந்தியச் சந்தையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. சியோமியின் சமீபத்திய ட்வீட் படி, Mi 10i 5ஜி போன் இந்தியச் சந்தைக்கு வந்த மூன்று வாரங்களில் ரூ. 400 கோடிக்கு மேல் விற்பனையைத் தாண்டியுள்ளது. பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் அதிக சக்தி கொண்ட 5ஜி சாதனங்களில் ஒன்றாக இந்த போன் மாறியுள்ளது.

Mi 10i 5G ஸ்மார்ட்போன்

Mi 10i 5G ஸ்மார்ட்போன்

Mi 10i ஸ்மார்ட்போன் பெயரில் 'i' என்பது இந்தியாவைக் குறிக்கிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியர்களை மனதில் வைத்து இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் ஜனவரி 7 ஆம் தேதி அமேசான் பிரைம் பயனர்களுக்காக விற்பனைக்கு அறிமுகம் செய்தது, பின்னர் திறந்த விற்பனைக்காக ஜனவரி 8, 2021 முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வந்தது.

விற்பனை மற்றும் விலை

விற்பனை மற்றும் விலை

Mi 10i ஸ்மார்ட்போனின் முதல் பதிப்பான 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 20,999 ஆகும். இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 21,999 ஆகும். அதேபோல், இதன் உயர் திறன் ஸ்டோரேஜ் மாடலான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 23,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த புதிய போன் பசிபிக் சன்ரைஸ், மிட்நைட் பிளாக் மற்றும் அட்லாண்டிக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

ரூ.6,999 மட்டுமே: 2 கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்02!ரூ.6,999 மட்டுமே: 2 கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்02!

Mi 10i சிறப்பம்சம்

Mi 10i சிறப்பம்சம்

  • 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே
  • 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்
  • 6ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • MIUI 12 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு

Best Mobiles in India

English summary
Mi 10i 5G Sales Cross Rs 400 Crore in Three Weeks of coming into the market : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X