காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்: என்னமோ நல்லது நடந்த சரி.!
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

குளிர்சாதன வசதியைத் தருகின்றன
மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும்,வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது
மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

செயற்கை மரம்
இந்நிலையில் காற்றை சுத்தப்படுத்த கூடிய செயற்கை மரங்களை மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது, குறிப்பாக இந்த செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயோஅர்பன்
நகரங்களில் மரங்களை வளர்ப்பதற்கு அதிக இடமும், நேரமும் தேவைப்படும் சுழுலில் இந்த இந்த செயற்கை மரம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் பயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள் செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ சிட்டி
அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டைக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications