பனி எரிமலையின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

|

மிசிகன் ஏரிக்கு அருகில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் புகைப்படங்களை ஒரு வானிலை ஆய்வாளர் எடுத்துத்துள்ளார். அந்த ஆச்சர்யமூட்டும் நிகழ்வு - வெடிக்கும் பனி எரிமலைகள்.

பனி எரிமலைகள்

பனி எரிமலைகள்

மிசிகனின் சவ்கடக்கில் உள்ள ஓவல் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூம்பு வடிவ பனித்திட்டினை கண்டு தடுமாறினார் எர்னி ஒஸ்டுனோ .இவை பொதுவாக காணப்படுபவை என்றாலும், பனி எரிமலைகள் குளிர்ந்த வெப்பநிலையிலும் குறைந்த பட்சம் மூன்று அடி உயரத்திலும் மட்டுமே உருவாக முடியும்.

 ஜோடி 'பனி எரிமலைகள்'

ஜோடி 'பனி எரிமலைகள்'

பனியின் அடியில் உள்ள அலைகள் மேலுள்ள திறப்பின் வழியாக தண்ணீரை மேலே தள்ளி, எரிமலை வெடிப்பைப் போல தோற்றமளிக்கின்றன.'கடற்கரைக்குச் சென்று அலைகள் பனியுடன் ஊடாடுவதை பார்ப்பது தான் வாழ்வின் சிறந்த நாள்' என்று தேசிய வானிலை சேவை ட்வீட் செய்ததுள்ளது.
பிப்ரவரி 16, 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓவல் கடற்கரையில், ஜோடி 'பனி எரிமலைகள்' வெடித்துள்ளன. '

தட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? இனிமேல் தட்கல் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? இனிமேல் "அந்த" பிரச்சனை இருக்காது!

தேசிய வானிலை சேவை

தேசிய வானிலை சேவை

கிராண்ட் ராபிட்ஸ் தேசிய வானிலை சேவையுடன் பணியாற்றும் வானிலை ஆய்வாளர் கோர்ட் ஸ்போல்டன் இதுகுறித்து கூறுகையில் 'கரையோரத்தில் திரட்டப்பட்ட பனியை அலைகள் ஏதோ ஒரு சக்தியுடன் தாக்கிய இடங்களில் பனி எரிமலைகள் ஏற்படுகின்றன.மிசிகன் ஏரியின் கரையில் பனி உருவாகும் அளவுக்கு மிகவும் குளிராக இருந்த நிலையில், அந்த பனியின் மேற்பரப்பை நீர் அலைகள் உடைத்துவிட்டன' என அந்த நிகழ்வை விளக்குகிறார்.

எரிமலையை ஒத்திருக்கிறது

"அலைகள் ... போதுமான வலிமையுடன் இருந்ததால், நீர் அதன் வழியாக தண்ணீரை மேல்நோக்கி தள்ளி, மிதக்கும் பனியை மேலே தூக்கி எறிந்து விடுகிறது. இது நிகழும்போது, சில ​​மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் நீடிப்பதால், அது ஒரு கூம்பு வடிவத்தை உருவாக்குகிறது. எனவே இது ஒரு எரிமலையை ஒத்திருக்கிறது" என்கிறார்.

பொதுவான நிகழ்வு

பொதுவான நிகழ்வு

இது உயர் அலைகளின் இயக்கத்தால் உருவாகும் தாக்கத்தால் இந்த எரிமலைகள் பனித்திட்டுகளின் விளிம்பில் உருவாகின்றன. இது இப்பகுதியில் ஒரு பொதுவான நிகழ்வு என்றாலும், பனி கட்டமைப்புகள் உருவாக சூழல் சரியானதாக இருக்க வேண்டும்.

வெப்பநிலை போதுமான குளிர்ச்சியைக் கொண்டிருக்கும் நிலையில், அலைகள் குறைந்தது மூன்று அடி உயரத்தில் இருக்க வேண்டும் மற்றும் அந்தப் பகுதியை பனியால் மூட வேண்டும். பனி திட்டிற்கு கீழே உள்ள அலை ஆற்றலால் இது வெடித்து, அங்குள்ள திறப்பின் வழியே நீரை வெளியே தள்ளுகிறது.

 சமச்சீர் ஒற்றை கூம்புகள்

சமச்சீர் ஒற்றை கூம்புகள்

பனி எரிமலைகள் பொதுவாக கரையோரத்தில் உள்ள வளைவுகளில் காணப்படும் நிலையில், பெரும்பாலும் இவை சமமாக இடைவெளியில் உள்ளன. இருப்பினும்,
சில நேரங்களில் தனித்தனியாகயும் உருவாகின்றன.


வல்லுநர்கள் இந்த நீண்ட கட்டமைப்புகளை 'குளிர் பகுதி' பனி எரிமலைகள் மற்றும் 'கிட்டத்தட்ட சமச்சீர் ஒற்றை கூம்புகள்' என்று குறிப்பிடுகின்றனர். இவை கடற்கரை, மணல் பட்டை அல்லது பாறை வளைவுகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் விவரிக்கின்றனர்.

தனி கூம்புகள்

கரைக்கு அருகில் உருவாகும் இந்த தனி கூம்புகள், பனியின் பலவீனத்தின் விளைவாக கருதப்படுகின்றன. இருப்பினும் அவை இன்னும் செயல்பாட்டு நிலையில் காணப்படவில்லை.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

இதுபோன்ற நிகழ்வுகள்

மிசிகனில் இது மிகவும் பொதுவானதாக இருந்தாலும், ஈரி ஏரியின் கரையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் காணப்படுகின்றன.

news Source: dailymail.co.uk

Best Mobiles in India

English summary
Meteorologist captures stunning image ice volcanoes erupting shore Lake Michigan: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X